சென்னை: சென்னை நீலாங்கரை சார்பதிவாளர் தாமுவை 48 மணிநேரத்தில் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்ற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததால், இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பிறப்பித்துள்ளார். திருவான்மியூரை சேர்ந்த சக்திகுமார் என்பவர் தனது குடும்ப சொத்துக்குளை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது சகோதரி சாவித்திரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த போது, போலி ஆவணங்கள் அடிப்படையில் பத்திரங்களை பதிவு செய்தது தெரியவந்தது.
மேலும் போலி ஆவணங்கள் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்ய நீலாங்கரை சார்பதிவாளர் தாமு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சார்பதிவாளர் தாமு மற்றும் போலி ஆவணத்தை பத்திரபதிவு செய்ய உடந்தையாக இருந்தவர்களை 48 மணிநேரத்தில் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பிறப்பித்துள்ளார்.