சென்னை: ரூ.8 கோடி புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாக கைது செய்யப்பட்ட போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான சேகர் ரெட்டி உள்பட 3 பேரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, உத்தரவிட்டார். சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 140 கோடிக்கும் அதிகமான பணமும், 150 கிலோவுக்கு மேல் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ. 24 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார் மற்றும் கூட்டாளிகளான திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம், முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே ரூ.8 கோடி அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கியதாக, தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்பட 3 பேரை மேலும் ஒரு வழக்கில் சிபிஐ கைது செய்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்ற காவல் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி வெங்கிடசாமி சேகர் ரெட்டி, சினிவாசலு, பிரோம் குமார் ஆகியோரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.