சென்னை: மத்திய அரசின் ரூபாய் நோட்டுக்கு எதிராக மக்களுக்காக போராடிய பெண்களின் மார்பகங்களை காமவெறியுடன் கசக்கி கொடூரமாக சென்னை போலீசார் நடந்திருப்பது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவித்து 250 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்திருக்கிறது. மோடி அரசு அளித்த வாக்குறுதியின் படி டிசம்பர் 30-ந் தேதியுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
நாட்டு மக்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்தும் விதமாக டிசம்பர் 31-ந் தேதி நாடு முழுவதும் இடதுசாரி இயக்கங்கள் போராட்டம் நடத்தின. சென்னையில் இடதுசாரி அமைப்புகளில் ஒன்றான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர். சென்னை மேடவாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் போலீசார் மிக கொடூரமாக காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் மார்பகங்களை வேண்டுமென்றே கசக்கி ஈனப் பிறவியாக செயல்பட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர் ரவி.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை மிக கொடூரமாக தாக்கி இனி போராட்டமே நடத்தக் கூடாது என கொலைமிரட்டல் விடுத்தும் இருக்கின்றனர். இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொடூரங்களை கண்டு ஒதுங்கிப் போகாமல் தங்களுக்கு நேர்ந்த அந்த ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தி வாக்குமூலமாக சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட இடதுசாரி பெண்கள்.