சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப் போகிறார்கள் என டெல்லியில் இருந்து வந்த தகவலால் சசிகலா பீதியில் ஆடிப்போயுள்ளாராம். அதிமுக தலைமை அலுவலகத்தில் 6 நாட்களில் 50 மாவட்ட செயலர் ஆலோசனை கூட்டத்தில் இன்று காலை சசிகலா உற்சாகமாக கலந்து கொண்டார். ஜெயலலிதா பாணியில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்த நிர்வாகிகளை தக்க வைக்க முயற்சித்தார்.
ஆனால் மதிய உணவுக்காக போயஸ் கார்டனுக்குப் போன சசிகலா ரொம்பவே அப்செட்டாகிவிட்டாரம். இது தொடர்பாக விசாரித்த போது, டெல்லியில் இருந்து வந்த தகவல்தான் அப்படி அப்செட் ஆகி அவரை பீதியில் ஆட வைத்துவிட்டதாம். அதாவது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்கின்றனர். இதனால் எந்த நேரத்திலும் இந்த தீர்ப்பு தேதியை உச்சநீதிமன்றம் பட்டியலிடக் கூடும். இந்த தகவல்தான் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டதாம். முதல்வர் பதவியை குறுக்கு வழியில் கைப்பற்றி அமர்ந்துவிடலாம் என துடித்துக் கொண்டிருந்த சசிகலா இப்போது பீதியில் ஆடிப் போயுள்ளாராம்.