சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். இன்றுடன் ஒரு மாதம் முடிந்து விட்டது. ஜெயலலிதா இறந்து ஒரு மாதம் முடிந்து விட்டு நிலையில் தமிழகம் முழுவதிலும் அமைதி ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தென் சென்னை வடக்கு மாவட்டக் கழகம் சார்பில், மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், ஜெயலலிதா நினைவிடத்தை சென்றடைந்தது. அங்கு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். வடசென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், மண்ணடி சந்திப்பில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம் ராயபுரம் வழியாகச் சென்று G.A. சாலையில் நிறைவடைந்தது. அம்மாவின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் திரு. D. ஜெயக்குமார், வடசென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.நா.பாலகங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் உதயகுமார்:
மதுரை திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் உசிலம்பட்டி சாலையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். ரதம் போல அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மவுனமாக ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பழனியில் நினைவஞ்சலி:
திண்டுக்கல் மாவட்டம் சார்பில் நடைபெற்ற 30வது நாள் நினைவஞ்சலி கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வேடசந்தூர் எம்.எல்.ஏ விபிபி பரமசிவம், முன்னாள் மேயர் மருதராஜ், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்:
தென்சென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், விருகம்பாக்கம் தசரதபுரத்தில் தொடங்கிய அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சிவன் பூங்கா அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு அதிமுகவினர் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் பங்கேற்பு:
ஈரோடு மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
தம்பித்துரை அஞ்சலி:
கரூரில் நடைபெற்ற 30வது நாள் அஞ்சலி கூட்டத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு கொள்கை பரப்பு செயலாளரும், லோக்சபா துணை சபாநாயகருமான மு. தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் கண்ணீர் மல்க மலர்தூவி மரியாதை செலுத்தினர்.