மும்பை: யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியிலிருந்து கீழே இறங்கியுள்ளார் மகேந்திர சிங் டோணி. இதற்கு காரணம் என்ன என்பது குறித்துதான் ரசிகர்கள் மத்தியில் இப்போது ஓயாத பேச்சு. சிலர் வயது காரணமாக டோணியே பெருந்தன்மையாக கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்ததாக கூறுகிறார்கள். சிலரோ, கேப்டன் பதவியை பறிக்கும் முன்பு, வேறு வழியின்றி அவர் அதை முந்திக் கொண்டு தியாகம் செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.
டோணியின் வருகை:
ஆனால், 'கேப்டன் டோணி'-க்கான தேவை இந்திய அணிக்கு இப்போது இல்லை என்ற யதார்த்தம்தான் டோணியின் இம்முடிவுக்கு காரணம். 2007ல் இந்திய ஒருநாள் அணிக்கு டோணி கேப்டனாக வந்தபோது, இந்தியா உலக கோப்பை தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அப்போது டோணி பெற்ற வெற்றிகள் ஒவ்வொன்றும், முக்கியத்துவம் பெற்றன.
அசைக்க முடியாத அணி:
ஏனோதானோ என மாறிப்போயிருந்த இந்திய அணியை, ஒரு குழுவாக மாற்றிக் காட்டி 2003 உலக கோப்பையில் ஃபைனல் வரை கூட்டிச் சென்றவர் கங்குலி. ஆனால் அதன்பிறகு அணி சரிவடைய ஆரம்பித்தபோதுதான் டோணி கேப்டனாக பொறுப்பேற்றார். இதன்பிறகு முழு உச்சம் தொட்ட இந்திய அணி, அனைத்து வகை பட்டங்களையும் வென்று இன்று அசைக்க முடியாத சக்தியாக மாறியுள்ளது.
கோஹ்லி எழுச்சி:
2014ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார் டோணி. அதன்பிறகு விராட் கோஹ்லி கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையில் அணி பல வெற்றிகளை குவித்து வருகிறது. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியோடு சேர்த்து, தொடர்ந்து 18 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தார் கோஹ்லி.
கேப்டன்ஷிப் பதவி:
இப்படி கேப்டன்ஷிப்புக்கு இருந்த பெருமை கோஹ்லிக்கு ஷிப்ட் ஆனதுமே, 'கேப்டன் டோணி'க்கான பணி முடிவடைந்துவிட்டது. பேட்டிங்கில் ஏற்கனவே சொதப்ப ஆரம்பித்த டோணியால் இனி கேப்டன்ஷிப் பெயரை மட்டுமே சொல்லி அணியில் நீடிக்க முடியாது என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
கங்குலி வருகை:
இதில் இன்னொரு தகவலும் டோணியின் அவசர முடிவுக்கு காரணம். அதுதான் பிசிசிஐ தலைவராக கங்குலி வருவதாக வெளியான தகவல்கள். கங்குலிக்கும், டோணிக்கும் ஆகாது என்ற வதந்தியை கூட ஓரம் தள்ளிவிடலாம், ஆனால் இருவரது கேரக்டருமே ஒத்துப்போகாது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியது. கங்குலி எப்போதுமே கோஹ்லி ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கோஹ்லி கோஷ்டியை சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்த டோணி, கங்குலியிடமும் சிக்கி அவமானப்பட வேண்டாம் என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. எனவே, கவுரவமாக கேப்டன் பதவியை விட்டு கொடுத்துவிட்டு, "தம்பி வா.. தலைமை தாங்க வா.. என கோஹ்லிக்கு அழைப்புவிடுத்துவிட்டார் டோணி. இனி எல்லாமே கோஹ்லிதான். விரைவிலேயே டோணியின் ஓய்வு முடிவும் வெளியே வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.