சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை விமர்சித்து சசிகலாவின் பெயரில் அறிக்கை வெளியானது. அதே நேரத்தில் ஸ்டாலினுக்கு முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்திருப்பது மன்னார்குடி கோஷ்டியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தில் இருக்கிறது. என்னதான் சசிகலா காலில் பன்னீர்செல்வம் விழுந்தபோதும் மன்னார்குடி கோஷ்டி அவரை ஏற்க மறுத்து கொண்டிருக்கிறது.
ஓபிஎஸ்-க்கு வாக்குறுதிகள்:
இதனால் அரசியலைவிட்டே ஒதுங்கும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்திருந்தார். அப்படி ஓபிஎஸ் ஒதுங்கினால் திமுக அவரை வளைத்துவிடும் என அஞ்சி மன்னார்குடி கோஷ்டி ஓபிஎஸ்-க்கு வாக்குறுதிகளை அள்ளி தருகிறது.
சசிகலா பெயரில் அறிக்கை:
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலினை விமர்சித்து சசிகலாவின் பெயரில் கையெழுத்திடாத அறிக்கை ஒன்று நேற்று வெளியானது. அந்த அறிக்கை வெளியானது சசிகலாவுக்கே தெரியுமா என்பது அவருக்கே வெளிச்சம்.
ஸ்டாலினுக்கு வாழ்த்து:
சசிகலா பெயரில் அறிக்கை வெளியான அதே நேரத்தில் தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது ஸ்டாலினுடன் புன்னகை பூத்த முகமாக பேசிக் கொண்டிருந்த ஓபிஎஸ், திமுக செயல் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
அதிர்ச்சியில் மன்னார்குடி கோஷ்டி:
இது உடனிருந்த அமைச்சர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தகவல் உடனே போயஸ் கார்டனுக்கு பாஸ் செய்யப்பட்டதாம். நாம நினைத்ததுபோல ஸ்டாலினுடன் இப்பவே நெருக்கம் காட்டுகிறாரே ஓபிஎஸ் என மன்னார்குடி கோஷ்டி மீண்டும் முருங்கைமரத்தில் ஏறி முறுக்கிக் கொண்டு நிற்கிறதாம்.