சென்னை: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மேற்கொண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடமாற்றம் செய்தல் ஆகிய விபரங்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. இந்நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 2 கோடியே 93 லட்சம் பேர் ஆண்கள் 2 கோடியே 99 லட்சம் பேர் பெண்கள். 5 ஆயிரத்து 40 மூன்றாம் பாலினத்தவரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும், தகுதி உடையோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருந்தால், ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி, பூந்தமல்லி, மாதவரம், மதுரவாயல், திருவொற்றியூர் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண் வாக்காளர்கள் 16 லட்சத்து 31 ஆயிரத்து 745 பேரும், பெண் வாக்காளர்கள் 16 லட்சத்து 49 ஆயிரத்து 816 பேரும், இதர வாக்காளர்கள் 707 பேர் என மொத்தம் 32 லட்சத்து 82 ஆயிரத்து 268 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 24 ஆயிரத்து 307 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், திருச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. பழனிச்சாமி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 73 ஆயிரத்து 57 பேரும், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 24 ஆயிரத்து 273 பேரும், இதர வாக்காளர்கள் 180 பேர் என 21 லட்சத்து 53 ஆயிரத்து 137 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 50 ஆயிரத்து 157 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 12 லட்சத்து 71 ஆயிரத்து 153 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 25 லட்சத்து 4 ஆயிரத்து 884 வாக்காளர்கள் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலில், 15 லட்சத்து 4 ஆயிரத்து 246 பேர் இடம் பெற்றுள்ளனர்.