டெல்லி: 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளன. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் பிப்ரவர் 4 முதல் மார்ச் 8 வரை நடைபெறுகிறது. மார்ச் 11-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 5 மாநில தேர்தல் முடிவடைந்த பின்னர் மார்ச் மாதம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அத்துடன் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்கள் இன்று புகார் தெரிவித்தனர்.