மும்பை: பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும், தனியாக நடந்து சென்ற பெண்ணிடமும் பாலியல் அத்துமீறல் கொடுமைகள் நடந்துள்ளது குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பாலிவுட் முன்னணி நடிகரான அக்ஷய்குமார். தனது டிவிட்டர் ப்ககத்தில் வெளியிட்டுள்ள குட்டி வீடியோவில் அவர் கூறுகையில், "பெங்களூர் சம்பவம் நாம் பின்னோக்கிய பரிணாமம் கொள்வதாக எண்ண செய்கிறது. அதாவது, மனிதனிலிருந்து விலங்குகளாக.. வேண்டாம், விலங்குகள் கூட இதைவிட சிறந்தவை. உண்மையிலேயே வெட்கக்கேடு" என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்., மனிதனாக இருக்கவே இன்று வெட்கப்படுகிறேன். புத்தாண்டு விடுமுறையை முடித்துவிட்டு எனது நான்கு வயது மகளோடு வீடு திரும்பியதுமே, பெங்களூர் மானபங்க சம்பவத்தை அறிய வேண்டியதாயிற்று. நீங்கள் எல்லாம் என்ன உணர்கிறீர்களோ தெரியாது. எனது ரத்தம் கொதிக்கிறது.
The Bangalore incident makes me feel we r evolving backwards,from humans to animals,rather beasts coz even animals are better!Truly shameful pic.twitter.com/FJwJ80Mkby
— Akshay Kumar (@akshaykumar) January 5, 2017
பெண்ணை மதிக்கத் தெரியாத ஒரு சமூகம், மனித சமூகம் என அழைக்கவே தகுதியற்றது என்பது எனது கருத்து. அதைவிட கொடுமை, ஆடைகளை அடிப்படையாக வைத்து, இதுபோன்ற சம்பவங்களை நியாயப்படுத்தும் தைரியம் சிலருக்கு இருப்பதுதான். பெண்கள் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டாம். பயமற்றவர்களாக இருங்கள். தற்காப்பு கலையை கற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.