சென்னை: இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என்ற இரண்டாம் கெட்ட நிலையிலேயே ஜல்லிக்கட்டு விரும்பிகள் இருந்து வருகின்றனர். மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள நியூ காலேஜ் மாணவர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். வரும் 14ம் தேதி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனையொட்டி ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யலாமா வேண்டாமா என்று தென் மாவட்ட மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டை நடத்த முடியாத சூழ்நிலையில், இந்த ஆண்டாவது மத்திய அரசு எதையாவது செய்து ஜல்லிக்கட்டை நடத்திவிடாதா என்ற ஏக்கத்தில் தென் மாவட்டத்து மக்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், மதுரை, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகயினர் என அனைவரும் போராடி வருகின்றனர். இதனையடுத்து, இன்று சென்னையில் உள்ள நியூ காலேஜ் மாணவர்கள், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி கல்லூரி வாசலுக்கு வெளியே மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.