சென்னை: ஜெயலலிதாவின் திடீர் மறைவு, பொதுச்செயலராக சசிகலா தேர்வு போன்ற காரணங்களால், அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், அக்கட்சியின் முக்கிய பேச்சாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து கட்சியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
சசிகலாவை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாமல் வெறும் தோழியாக மட்டுமே நடத்தி வந்தார் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதா மறைந்து ஒரு மாத காலம் ஆவதற்குள் அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா அடுத்ததாக முதல்வர் பதவிக்கும் காய் நகர்த்துவதாக தெரிகிறது. சசிகலா தலைமையில் இருக்க விரும்பாத கட்சித் தொண்டர்கள், அவரின் உருவப்படம் உள்ள பேனர் கிழிப்பு உட்பட பல்வேறு வகையில், தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
விஷம் குடித்தார்:
தொண்டர் ஒருவர், ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்தார். தொண்டர்களை போலவே, கட்சியில் ஓரளவுக்கு அறிவார்ந்து யோசித்து பிரசாரம் செய்யக்கூடிய, தமிழ் இலக்கியம் அறிந்த பல வி.ஐ.பி பேச்சாளர்களும் கட்சியைவிட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
ஆனந்தராஜ்:
ஜெயலலிதாவுக்காகவும், அதிமுக வெற்றிக்காகவும், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று, தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் ஆனந்தராஜ், ஜெயலலிதா இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை என கூறி கட்சியை விட்டு வெளியேறஇவிட்டார்.
விந்தியா:
மற்றொரு முக்கிய பேச்சாளரான நடிகை விந்தியாவுக்கும் சசிகலா தேர்வில் அதிருப்தியாம். ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் எதிர்த்து பேசாமல் உள்ளாராம். அதேநேரம் ஆதரவு தெரிவித்தும் அவர் எந்த கருத்தையும் சொல்லவில்லை.
நாஞ்சில் சம்பத்:
இந்நிலையில் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத், கட்சியை விட்டு விலகிவிட்டார். இவர், மதிமுகவிலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த போது அவருக்கு, இன்னோவா கார் ஒன்றை, ஜெயலலிதா பரிசாக வழங்கினார். அவர் மறைவுக்கு பின், அதிருப்தியில் இருந்த நாஞ்சில் சம்பத், கட்சிஅலுவலகத்தில் நேற்று, இன்னோவா காரை ஒப்படைத்தார்.
சிதம்பரம் ஜெயவேல்:
சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முதன்மை பேச்சாளர்களில் ஒருவரான சிதம்பரம் ஜெயவேல் அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார். அத்துடன் எம்ஜிஆருக்கு ஒரு சின்னம்மா இருக்கிறார் என்பதை தற்போதுதான் பண்ருட்டியார் சொல்லித்தான் தமக்கு தெரியும் எனவும் அவர் கிண்டலடித்துள்ளார்.
பழ.கருப்பையா:
ஏற்கனவே ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே ஊழலும், முறைகேடும் தலைவிரித்து ஆடுகிறது என கூறி, இலக்கியவாதியும், அதிமுக எம்எல்ஏவாக (அப்போது) இருந்தவருமான பழ.கருப்பையா அதிமுகவைவிட்டு வெளியேறிவிட்டார். அவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். ஸ்டாலின் தலைமையில் இணைகிறார்கள்
கருணாநிதி காலத்து கசப்புகளை மறந்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் தமிழ் இலக்கிய ஆளுமையாளர்களும், பேச்சாளர்களும் திமுகவில் தொடர்ந்து இணைய வாய்ப்புள்ளது. நாஞ்சில் சம்பத்தும் அப்பாதையையே தேர்ந்தெடுப்பார். திமுகவின் தலைமை மாறியது கூடுதலாக பேச்சாளர்களை ஈர்க்க உள்ளது, அதிமுக தலைமை மாறியது, இழக்க வைக்க உள்ளது என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.