போபால்: மகாத்மா காந்தி போட்டோவே இல்லாமல் புதிய கரன்சி நோட்டை அச்சடித்து அவசரம் காட்டியுள்ளது ரிசர்வ் வங்கி. மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் கையில் இந்த நோட்டு கிடைத்து அவர்கள் படாதபாடுபட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்திலுள்ளது பிச்சுகாவ்டி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணா மீனா என்பவர் எஸ்.பி.ஐ வங்கியிலிருந்து 2000 ரூபாய் தாள்களை வாங்கியுள்ளார்.
சந்தைக்கு போய் பொருட்களை வாங்கும்போதுதான், அந்த நோட்டுக்களில் மகாத்மா காந்தி படம் மிஸ் ஆகியிருந்தது தெரியவந்தது. அதே மார்க்கெட்டில் இன்னொரு விவசாயியும் இப்படி ஒரு நோட்டை வைத்திருந்தாராம். இருவருமாக சேர்ந்து எஸ்.பி.ஐ வங்கியை நோக்கி விரைந்தனர். "இப்படி கள்ள நோட்டை எங்கள் தலையில் கட்டிவிட்டீர்களே. போலீஸ் எங்களையல்லவா பிடிக்கும்" என கூறி வங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஆனால், 'ச்சச்சே.. இதெல்லாம் கள்ள நோட்டு இல்லை. பிரிண்டிங் மிஸ்டேக்" என கூலாக கூறிய அதிகாரிகள் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு, விவசாயிகளுக்கு வேறு பணத்தை கொடுத்தனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.ஐ மேலாளர் ஆகாஷ் ஸ்ரீவத்சவ் கூறுகையில், காந்தி போட்டோ இல்லாமல் வந்தவை கள்ள நோட்டுக்கள் கிடையாது, அவை அவசர பிரிண்டிங்கால் ஏற்பட்ட தவறாக இருக்கலாம் என்றுள்ளார்.
பணத்துக்கான தேவை அதிகரிப்பதால், மகாத்மா காந்தி போட்டோ உள்ளதா என்பதை கூட பார்க்காமல் அதி வேகத்தில், வெந்ததும், வேகாததுமாக பணம் பிரிண்ட் செய்யப்பட்டு வருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. ஏனெனில் இம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் இதேபோன்ற நோட்டுக்களை வங்கிகள் வாயிலாக பெற்று பிறகு திருப்பி கொடுத்துள்ளார்களாம்.