சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தங்களுடைய அனுமதியின்றி முதல்வர் ஓபிஎஸ் எப்படி சந்திக்கலாம்? என கொந்தளித்துக் கொண்டிருக்கிறதாம் மன்னார்குடி கோஷ்டி. முதல்வராக பன்னீர்செல்வம் பதவி வகித்தாலும் அவரை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது போயஸ் கார்டனில் இருக்கும் மன்னார்குடி கோஷ்டி. ஓபிஎஸ்-ம் சில நேரங்களில் சரண்டரானாலும் தம்மால் அப்படி இருக்க முடியாது என்பதை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். டெல்லி சென்றுவிட்டு திரும்பிய போது போயஸ் கார்டன் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்தார் பன்னீர்செல்வம். இதையடுத்து அவரை வறுத்தெடுத்துவிட்டது மன்னார்குடி கோஷ்டி.
பதவி பறிப்பில் மும்முரம்:
பின்னர் தம்முடைய பவ்யம், பணிவு உச்சமாக காலில் விழுதல் என அனைத்தையும் வெளிப்படுத்தி சமாதானப்படுத்த முயற்சித்தார் பன்னீர்செல்வம். ஆனாலும் அவருடைய முதல்வர் பதவியை கபளீகரம் செய்வதிலேயே மன்னார்குடி கோஷ்டி குறியாக இருக்கிறது.
சமாதான முயற்சி:
இதனால் அரசியலைவிட்டே ஒதுங்கும் முடிவுக்கும் வந்தார் ஓபிஎஸ். இதில் அதிர்ந்துபோன மன்னார்குடி தரப்பு அவருக்கு சசிகலா அமைச்சரவையில் 2-வது இடம்தருவோம் என உறுதியளித்திருந்தது.
ஸ்டாலினுடன் சந்திப்பு:
இந்த நிலையில் நேற்று திடீரென எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலினை தலைமை செயலகத்தில் பன்னீர்செல்வம் சந்தித்தார். மன்னார்குடி கோஷ்டி உத்தரவின்படி அமைச்சர்கள் சிலரும் பன்னீர்செல்வத்துடன் இருந்தனர்.
ஸ்டாலினுக்கு வாழ்த்து
அவர்களே எதிர்பாராத நேரத்தில் ஸ்டாலின் செயல் தலைவரானதற்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார் பன்னீர்செல்வம். பொதுவாக முதல்வர் பன்னீர்செல்வம் யாரையும் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுமெனில் தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என சொல்லி வைத்திருந்ததாம் மன்னார்குடி தரப்பு.
கொந்தளித்த மன்னார்குடி கோஷ்டி:
முதலில் ஸ்டாலின் சந்திக்க முயற்சித்தபோது போயஸ் கார்டனில் இருந்து க்ரீன் சிக்னல் வரவில்லை. ஆனால் நேற்று போயஸ் கார்டனை கேட்காமலேயே ஸ்டாலினை சந்தித்தார் பன்னீர்செல்வம். இதையடுத்து போயஸ் கார்டனுக்கு போன பன்னீர்செல்வத்திடம் அதெப்படி எங்களை கேட்காமல் ஸ்டாலினை சந்தித்தீர்கள்? அதுவும் வாழ்த்தெல்லாம் சொல்லி இருக்கிறீர்கள்? என பாய்ந்தாம் மன்னார்குடி கோஷ்டி.