சென்னை: சசிகலா காரில் செல்லும்போது எங்கள் வயிறெல்லாம் எரிகிறது, கொலை செய்தாலும் பரவாயில்லை, சசிகலாவை எதிர்ப்போம் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டுக்கு முன்பு குவிந்த பெண் தொண்டர்கள் கதறினர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றுள்ளார். ஆனால், சசிகலா தலைமையை அதிமுகவின் பல லட்சம் தொண்டர்கள் ஏற்கவில்லை என தெரிகிறது. ஆங்காங்கு சசிகலா பேனர்கள் கிழித்து எறிகிறார்கள்.
இந்த நிலையில், சசிகலாவுக்கு மாற்றாக தொண்டர்கள் ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவை கட்சியின் தலைமை பதவி வகிக்க அழைக்கிறார்கள். சென்னை தி.நகரில் உள்ள சிவஞானம் சாலையிலுள்ள தீபா வீட்டுக்கு தினமும் அதிமுக தொண்டர்கள் வந்து தீபாவை அரசியலுக்கு அழைக்கிறார்கள். இன்று ஜெயலலிதா மறைந்து 30வது நாள் என்பதால், ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தீபா வீட்டை முற்றுகையிட்டு, அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.
இதில் பெண் தொண்டர்கள் அதிக அளவுக்கு காணப்பட்டனர். அதில் ஒரு பெண் கூறுகையில், "ஜெயலலிதா இறந்த பிறகு அவரது காரில் சசிகலா செல்வதை பார்க்கும்போது எங்க வயிறெல்லாம் எரியிது.. அதிமுக பதவிக்கு சசிகலா வரக்கூடாது. அதுக்கு அம்மாவோட சொந்த ரத்தம், தீபாதான் வரனும்" என கோஷமிட்டார். இன்னொரு பெண் கூறுகையில், "காய்ச்சலுன்னு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனீங்க. 75 நாளு கழிச்சி அம்மாவ பொணமாத்தான திருப்பி கொடுத்தீங்க. ஒன்னர கோடி தொண்டர்களுக்கு ஜெயலலிதா அம்மாவ பொணமாத்தான காட்டுனீங்க. என்ன காரணத்தால ஜெயலலிதா இறந்தாங்கன்னு காரணம் சொல்லுங்க பாப்போம். ஒரு மாசம் ஆகுது. அதுக்குல்ல இன்னொரு தலமையை நாங்க எப்படி ஏற்போம். உப்பு போட்டு சோறு தின்பவர்கள் இதை ஏற்க மாட்டோம். சசிகலா அஞ்சாங்கிளாஸ் படிச்சிருக்கு. ஆனா தீபாம்மா, லண்டன்ல பொலிட்டிக்கல் சயின்ஸ் படிச்சவங்க. அவங்கள படிக்க வச்சதே ஜெயலலிதா அம்மாதான். ஜெயலலிதா அம்மாவோட சொந்த ரத்தம், படிச்ச தகுதின்னு எல்லாம் இருக்குறது தீபாம்மாவுக்குதாங்க" என்றார் ஆவேசமாக.
அதிமுக தொண்டர் ஒருவர் கூறுகையில், "கட்சில அடிமட்ட தொண்டன்தான் உழைப்பான். மேலே உள்ளவர்கள்லாம் வேஸ்ட். நாங்கள்தான் உழைக்கிறோம். அப்படி உழைக்க கூடிய எல்லோரும் இங்கு (தீபா வீட்டுக்கு எதிரே) நிற்கிறோம்" என்றார். பெண் தொண்டர்கள் அனைவருமே சசிகலாவுக்கு எதிராக ஆக்ரோஷமான கருத்துக்களை எடுத்து வைத்தனர். அவர்கள்தான் மிகுந்த கொந்தளிப்போடு இருந்தனற். பிரசுரிக்க முடியாத அளவுக்கு மோசமான வார்த்தைகளால் அவர்கள் சசிகலாவை திட்டினர். தொண்டர்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக அதிமுகவின் பலமான, பெண் தொண்டர்கள் மத்தியில் சசிகலாவுக்கு எதிராக ஏற்பட்டுள்ள இந்த எதிர்ப்பு அலை பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.