சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை யாராவது கொச்சைப்படுத்துகிறார் என்றால் அது சசிகலா நடராஜனாகத்தான் இருக்கும். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் கேட்டாலே பக்கம் பக்கமாக ஜெயலலிதாவை எப்படி சசிகலா கொச்சைப் படுத்தினார் என்பதை வெளியிடுவார் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் ஐ பெரியசாமி சாடியுள்ளார். ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் ஓடோடிச் சென்று அவரது உடல் நலம் விசாரித்து, அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, இன்றைக்கு தி.மு.க.வின் பொதுக்குழுவில் கூட ஜெயலலிதா அம்மையார் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் போட்டிருக்கும் செயல் தலைவர் ஸ்டாலினைப் பார்த்து கொச்சைப்படுத்தும் அரசியல் செய்கிறார் என்று சொல்வதற்கு சசிகலா நடராஜனுக்கு கால் காசு தகுதி கூட இல்லை என்று இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார். ஸ்டாலினை விமர்சித்து சசிகலா வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளார் பெரியசாமி. அந்த அறிக்கை:
புதிய பொதுச் செயலாளர்:
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியிருப்பதாக அதிமுகவின் "புதிய" பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் முதல் அரசியல் அறிக்கை ஒன்றை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை முழுவதும் படித்துப் பார்த்தேன். எந்த வரியிலாவது "சட்ட பாதுகாப்புகளுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டை அதிமுக ஆட்சியில் நடத்தினோம்" என்று ஏதாவது வரிகள் இருக்குமா என்று தேடிப் பார்த்தேன். அப்படியொரு வரியை அந்த அறிக்கையில் சசிகலா நடராஜனால் சொல்ல முடியவில்லை. அதிலிருந்தே "ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாப்புடன் நடத்த முடியாமல் அதிமுக ஆட்சி தோற்று விட்டது" என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அலர்ஜி பீதி:
அலங்காநல்லூரில் தளபதி அவர்களுக்கு வந்த கூட்டத்தையும், இளைஞர்களின் ஆரவாரத்தையும் பார்த்து அதிமுகவிற்கு "அலர்ஜி" ஏற்பட்டு, "பீதியில்" இந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது என்பதைத் தவிர சசிகலா நடராஜனின் அறிக்கையில் வேறு ஏதுமில்லை. ஸ்டாலின் மிக அழகாக "ஜல்லிக்கட்டு தி.மு.க.விற்கும், அதிமுகவிற்கும் அல்ல" என்று சுட்டிக்காட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை கோடிட்டுக் காட்டினார். 50 எம்.பி.க்களை வைத்திருக்கிறீர்களே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று தான் கோரிக்கை வைத்தார்.
வெத்து வேட்டு:
ஆனால் அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் சசிகலா நடராஜன் இப்படியொரு "வெத்து வேட்டு" அறிக்கை வெளியிடுகிறார் என்றால் எங்கே முதல்வர் பன்னீர்செல்வம் ஸ்டாலினுக்கு பதில் சொல்லி ஏதாவது அறிக்கை விட்டு விடப் போகிறார் என்ற அச்சத்தில் தானே தவிர வேறு ஏதும் இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு தி.மு.க. அரசு கொண்டு வந்தது போன்றதொரு அவசரச் சட்டத்தை ஏன் "நுணுக்கமான வாதங்கள்" தெரிந்த அதிமுக ஆட்சி கொண்டு வரவில்லை? 50 எம்.பி.க்களை வைத்திருக்கும் அதிமுக மத்திய அரசை அவசரச் சட்டம் கொண்டு வரச் சொல்லி ஏன் வலியுறுத்தி சாதிக்க முடியவில்லை? தளபதி அவர்களின் நியாயமான இந்த கேள்விகளுக்கு சசிகலா நடராஜனால் பதில் சொல்ல முடியவில்லை.
சட்டியில் இருந்தால்தானே:
"சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்பது போல் அதிமுக அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த ஏதாவது துரும்பை எடுத்துப் போட்டிருந்தால் தானே, விளக்கிட முடியும். அதற்கும் வழி இல்லை. ஸ்டாலின் எழுப்பிய கேள்வியைத் தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த வேண்டும் என்று துடிக்கும் தென் மாவட்ட இளைஞர்கள் அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது என்பது சசிகலா நடராஜனுக்கு தெரியாமல் போயிருக்கலாம். அதற்கு தி.மு.க.வோ, தளபதியோ பொறுப்பாக முடியாது.
பன்னீர் செல்வத்திடம் கேட்டிருக்கலாமே
பன்னீர் செல்வத்திடம் கேட்டிருக்கலாமே
சசிகலா நடராஜன் இது மாதிரி அறிக்கைகளை விடும் முன்பு "கூகுளை" தேடிப் பார்க்க வேண்டாம். தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்படட நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம். இருந்தாலும் இப்போது இந்த அறிக்கை வாயிலாக ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தி.மு.க. எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிடுகிறேன். இந்த அறிக்கையையாவது பத்திரமாக வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு பற்றி எதிர்காலத்தில் அறிக்கை விடும் போது கவனமாக தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மதுரை ஹைகோர்ட் கிளை முதல் தடை:
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜல்லிக்கட்டுக்கு 29.3.2006 அன்று முதலில் தடை விதித்தது. உடனடியாக போர்க்கால வேகத்தில் செயல்பட்ட கழக அரசின் தீவிர சட்ட நடவடிக்கையால் அதே மதுரை உயர்நீதிமன்றம் "ஜல்லிக்கட்டு விளையாட்டை முறைப்படுத்தி நடத்தலாம்" என்று 9.3.2007 அன்று அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அரசாங்கத்தில் உள்ள ஜல்லிக்கட்டு தொடர்புடைய கோப்புகளில் இது இருக்கும். இந்த விவரத்தை இல்லையென்று சசிகலா நடராஜனால் மறுக்க முடியுமா? கழக அரசு பெற்ற இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதன் விளைவாக 27.7.2007 அன்று "ஜல்லிக்கட்டு நடத்தலாம்" என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் கழக அரசு சும்மா இருந்து விடவில்லை.
ஆக்கப்பூர்வமாக வாதிட்டோம்:
தமிழகத்தின் பாரம்பரியத்தை, பாரம்பரிய கலாச்சாரத்தை எடுத்து வைத்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக ஆக்க பூர்வமாக வாதிட்டது. அந்த வாதத்தின் பலனாக, "காளைகளை பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தலாம்" என்று 15.1.2008 அன்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. கழக அரசின் இந்த நடவடிக்கையை இல்லையென்று சசிகலா நடராஜனால் சொல்ல முடியுமா? அதன் பிறகு ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாப்புடன் நடத்த "ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டம்"-2009- யை கொண்டு வந்ததும் கழக அரசு தான். இந்த சட்டத்தின் படி ஜல்லிக்கட்டு விளையாட்டை ஜாம் ஜாம் என்று நடத்திக் காட்டியதும் தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். இதையெல்லாம் உண்மையில்லை என்று கூறுவதற்கு சசிகலா நடராஜனுக்கு தெம்பும், திராணியும் இருக்கிறதா?
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை:
ஆகவே சசிகலா நடராஜனுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன். தமிழர்களின் வீர விளையாட்டான "ஜல்லிக்கட்டு" இன்றைக்கு தடைபட்டிருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க அதிமுக அரசின் அலட்சியமே காரணம்! இதை "கூகுளில்" தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. "கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை" என்பது போல் அதிமுக அரசின் தோல்வியை கண்டுபிடிக்க கூகுளில் தேட வேண்டிய அவசியமில்லை. ஒரு வேளை - யாராவது கூகுளில் தேடினால் இப்போதெல்லாம் சசிகலா நடராஜனின் வண்டவாளம் தான் தண்டவாளம் போல் சமூக வளைதலங்களில் சிரிப்பாய் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நா கூசாமல் பொய்:
தி.மு.க. கொண்டு வந்த "ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்டத்தை" ஒழுங்காக நடைமுறைப்படுதாமல் திட்டமிட்டு கோட்டை விட்டதுதான் ஜல்லிக்கட்டு விளையாட்டு இன்றைக்கு நடக்காமல் போனதற்கு முக்கியக் காரணம் என்பதை தென் மாவட்ட இளைஞர்கள், தமிழக ஜல்லிக்கட்டு வீரர்கள் அனைவரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே ஜல்லிக்கட்டு பற்றி தி.மு.க. மீது குற்றம் சுமத்த சசிகலா நடராஜனுக்கு அருகதை இல்லை. தன் தவறை மறைக்க பிறர் பெயரைச் சொல்லி அனுதாபம் தேட முயற்சிப்பது போல் "ஜெயலலிதாவை கொச்சைப்படுத்த" ஸ்டாலின் இப்படி பேசியிருக்கிறார் என்று நா கூசாமல் பொய் சொல்ல வேண்டாம் என்று சசிகலாவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபாவிடம் கேட்டால் தெரியும்:
ஜெயலலிதா பெயரை யாராவது கொச்சைப்படுத்துகிறார் என்றால் அது சசிகலா நடராஜனாகத் தான் இருக்கும். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் கேட்டாலே பக்கம் பக்கமாக ஜெயலலிதாவை எப்படி சசிகலா கொச்சைப் படுத்தினார் என்பதை வெளியிடுவார். அதற்குள் எல்லாம் நான் போக விரும்பவில்லை. முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் ஓடோடிச் சென்று அவரது உடல் நலம் விசாரித்து, அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, இன்றைக்கு தி.மு.க.வின் பொதுக்குழுவில் கூட ஜெயலலிதா அம்மையார் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் போட்டிருக்கும் செயல் தலைவர் ஸ்டாலினைப் பார்த்து "கொச்சைப்படுத்தும் அரசியல்" செய்கிறார் என்று சொல்வதற்கு சசிகலா நடராஜனுக்கு "கால் காசு தகுதி" கூட இல்லை என்று இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.