சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றுள்ளார். ஆனால், சசிகலா தலைமையை அதிமுகவின் பல லட்சம் தொண்டர்கள் ஏற்கவில்லை என தெரிகிறது. ஆங்காங்கு சசிகலா பேனர்கள் கிழித்து எறிகிறார்கள். இந்த நிலையில், சசிகலாவுக்கு மாற்றாக தொண்டர்கள் ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவை கட்சியின் தலைமை பதவி வகிக்க அழைக்கிறார்கள்.
சென்னை தி.நகரில் உள்ள சிவஞானம் சாலையிலுள்ள தீபா வீட்டுக்கு தினமும் அதிமுக தொண்டர்கள் வந்து தீபாவை அரசியலுக்கு அழைக்கிறார்கள். இன்று தீபா வீட்டு முன்பு அதிமுக தொண்டர்கள் பெருமளவுக்கு குவிந்தனர். அதிலும் பெண் தொண்டர்கள் உணர்ச்சி மிகுதியில் இருந்தனர். அவர்களின் தொடர் கோஷங்களால் வீட்டை விட்டு வெளியே வந்தார் தீபா. பால்கனியில் அவரை பார்த்ததும், ஆண், பெண் தொண்டர்கள் ஆரவார கோஷம் எழுப்பினர். அவர்கள் மத்தியில் மைக் பிடித்து பேசிய தீபா, அம்மாவின் (ஜெயலலிதா) தியாகங்களையும், புகழையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. உங்களுக்காக நான் பணியாற்ற காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
அவர் இரட்டை விரலை அசைத்து காண்பித்த போது "அப்படியே அம்மா மாதிரி இருக்காங்கல்ல.." என்று பெண் தொண்டர்கள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. அதேபோல ஜெயா பேசும்போது, "அப்படியே அம்மா வாய்ஸ் மாதிரி இருக்குல்ல.. " என பெண் தொண்டர்கள் உருக்கமாகவும், வியப்பாகவும் ஒருவருக்கொருவர் பேசியதை கேட்க முடிந்தது. தீபாவின் உருவமும், குரலும் ஜெயலலிதாவை போன்றே இருப்பது அதிமுகவின் வாக்கு வங்கியான அடிமட்ட பெண்களிடம் பெரும் ஈர்ப்பை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.