சென்னை: அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டை ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலர் பதவியை கபளீகரம் செய்துவிட்டார் சசிகலா. ஜெயலலிதாவின் பங்களா, காரை அபகரித்த சசிகலா கட்சியையும் கஸ்டடியில் வைத்திருப்பதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அதிமுக தொண்டர்களால் ஏற்கவே முடியவில்லை. தற்போதைய நிலையில் சசிகலாவுக்கு ஜால்ரா போடும் அதிமுக நிர்வாகிகளே அதிமுகம். ஆகையால் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் தலைமையாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.
ஜெ. தீபா பேரவை:
தமிழகத்தின் பல நகரங்களில் ஜெ. தீபா பேரவை உருவாக்கப்பட்டு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபா வீட்டு முன்பு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வருகின்றனர்.
தீபாவே அரசியல் வாரிசு:
அதிமுகவின் தலைமையை ஜெ. தீபாதான் ஏற்க வேண்டும்; ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு தீபாவே என்ற முழக்கங்களை அவர்கள் எழுப்புகின்றனர். ஜெயலலிதா பாணியில் மாடியில் நின்று இரட்டை விரலை காட்டும் தீபா பின்னர் சில நிர்வாகிகளை அழைத்து பேசுகிறார்.
சசிகலாவை ஏற்க முடியாது:
இன்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் தீபா வீடு முன்னர் திரண்டனர். தீபாதான் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும்; சசிகலா தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இடைத்தேர்தலில் போட்டி:
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தீபாதான் போட்டியிட வேண்டும் என்றும் அதிமுகவினர் வலியுறுத்துகின்றனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகிற அதிமுக தொண்டர்கள் சசிகலா மீது வெறுப்பின் உச்சத்தில் இருப்பதையும் காண முடிந்தது.