சென்னை: அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா தலைமை ஏற்காமல் ஒதுங்கி இருக்கும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் தமது பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலரும் ஒதுங்கிவிட்டனர். தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் வேறுவழியில்லாமல் சசிகலா தலைமை ஏற்று செயல்பட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் சசிகலாவுக்கு எதிராக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை விட்டு வெளியேறி வருகின்றனர். பல இடங்களில் அதிமுக கிளை கழகங்கள் கலைக்கப்பட்டுவிட்டன. அதிமுகவினர் ஜெ. தீபா பேரவையை உருவாக்கி அதில் இணைந்து வருகின்றனர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திலும் அழைத்துவரப்படும் கூட்டம்தான் தொண்டர்களாக காட்சி தருகிறது. இதனிடையே சசிகலா தலைமைக்கு எதிராக நாஞ்சில் சம்பத் பகிரங்க போர்க்கொடி தூக்கி பொதுவாழ்க்கையை விட்டே ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் முன்னாள் டிஜிபியும் மயிலாப்பூர் எம்.எல்.ஏவுமான நட்ராஜ் தமது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.