சென்னை: ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2ஜி அலைக்கற்றை முறைகேடுடன் தொடர்புடைய ஏர்செல்-மேக்சிஸ் பேர விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர்த ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் இயக்குநராக உள்ள செஸ் குளோபல் அட்வைசரி சர்வீசஸ், அட்வான்டேஜ் ஸ்டிராடஜிக் கன்சல்டிங் ஆகிய நிறுவனங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணம் வந்துள்ளது. சர்ச்சைக்குரிய மேக்சிஸ் குரூப்தான் 2007 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பணத்தை கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மத்திய நிதி அமைச்சராகவும் சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அவர்தான் ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்க அனுமதி வழங்கினார். இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக 3 முறை அமலாக்கப் பிரிவு கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் தமக்கு கால அவகாசம் வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் கோரியிருந்தார்.
இதனையடுத்து, அமலாக்கத்துறை அனுப்புள்ள சம்மனை ரத்து செய்யக் கோரி, கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.