சென்னை: ரூபாய் நோட்டு பிரச்சனையால் மக்கள் அவதிப்படுவதாகவும், அந்த பிரச்சனை எல்லாம் பிரதமர் மோடிக்கு எங்கே புரியப் போகிறது என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ரூபாய் நோட்டு பிரச்சனை நாடு முழுவதும் பேசப்படுவதற்கு காரணம் ராகுல்காந்திதான். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மோடி பாராளுமன்றத்துக்கு வரவில்லை. அதனால்தான் பாராளுமன்றம் முடங்கியது. இந்த நடவடிக்கை சாத்தியம் இல்லை என்று பா.ஜ.க. தலைவர்களே கூறியிருக்கிறார்கள். மோடி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் அவதிப்படுவது சாதாரண மக்கள்தான். தினமும் 15 கோடி பேர் வங்கிகளில் காத்து நிற்கிறார்கள். 50 நாட்கள் பொருத்திருங்கள் என்றார். கருப்பு பணம் ஒழிந்து விட்டதா, என்ன நடந்தது? யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேசும்போது, "பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு செல்லும் பெண்கள் மருத்துவ செலவுக்கு பணம் கூட கட்ட முடியவில்லை. மணிக்கணக்கில் பணத்துக்காக வரிசையில் நிற்கும் பெண்கள் கழிவறை கூட செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதெல்லாம் மோடிக்கு எங்கே புரியப் போகிறது" என்றார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், பீட்டர் அல்போன்ஸ், விஜயதரணி எம்.எல்.ஏ., யசோதா, மகளிர் காங்கிரஸ் ஜான்சிராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.