டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை தற்காலிகமானது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். புத்தாண்டு பிறப்பை ஒட்டி, மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருந்து அளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி செயல்படுத்தியுள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் ஏழைகள் படும் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பு பணத்தை ஒழிக்கவும், ஊழலை எதிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாதது தான். உள்நாட்டை சேர்ந்த தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.