டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பினால் 55 நாட்களுக்கும் மேலாக பணப்பஞ்சத்தில் மக்கள் தவித்து வந்தனர். ஆளும் பாஜக அரசு மீது பலரது கோபம் திரும்பியது. நவம்பர் 8ஆம் தேதி தொலைக்காட்சியில் உரையாற்றியது போல டிசம்பர் 31ஆம் தேதியன்று பிரதமர் மோடி மீண்டும் உரையாற்றினார். அப்போது அவர் விவசாயிகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி, வங்கிகளின் கடன்களுக்கான வட்டி குறைப்பு, வங்கிகளில் வீட்டுக்கடன்களுக்கான மானியம் போன்றவற்றை அறிவித்தார்
ரூ.3500 கோடி செலவு:
புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த விவசாயம், வீட்டுவசதி உள்ளிட்ட திட்டங்களால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.3,500 கோடி செலவாகும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மதிப்பீடு செய்துள்ளது.
ரூ. 1000 கோடி:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எக்கோராப் என்ற பெயரில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் மோடி இரண்டு வீட்டு வசதித் திட்டங்களை அறிவித்திருந்தார். இதற்கான செலவு ஆண்டுக்கு ரூ.1,000 கோடியாக இருக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு:
கர்ப்பிணிப் பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களது வங்கிக் கணக்குக்கு அரசு ரூ.6,000 செலுத்தும் திட்டம் மோடியால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.1,200 கோடி செலவாகும்.
விவசாயிகளுக்கு ரூ. 1300 கோடி:
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு செலவிட ஆண்டுக்கு ரூ.1,300 கோடி தேவைப்படும். அதேபோல, மூத்த குடிமக்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான டெபாசிட் தொகைக்கு 10 வருடங்களுக்கு 8 சதவிகித வட்டி வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. த்திட்டத்துக்கான கால அளவு ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.