டொரான்டோ(கனடா): இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மறு கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கவும், திட்டங்கள் தீட்டவும் கனடாவில் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. 21ம் நூற்றாண்டின் பொருளாதாரச் சூழலுடன் இணைந்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அதற்கேற்றவாறு கல்விக்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் விவாதித்து திட்டமிடுவதற்கு இந்த மாநாட்டில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சுகாதார கட்டமைப்புகளை சீரமைத்து மக்களின் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
ஜனவரி 15, 16, 17 ம் தேதிகளில் ஸ்காபரோவிலுள்ள சென்டினியல் கல்லூரி வளாகத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசுகளில் கல்வி, சுகாதார அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள், துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்து கொள்கிறார்கள். அங்குள்ள தற்போதைய நிலைமையும், கல்வி, சுகாதாரத்திற்கான கட்டமைப்பு தேவைகளையும் மாநாட்டில் முன் வைக்க உள்ளார்கள். புலம்பெயர் தமிழ் அறிவியலாளர்கள், வல்லுனர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் பலரும் இம்மாநாட்டில் பங்கேற்று, வடக்குக் கிழக்கு மாகாணங்களின் தேவைகளை ஆழமாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளையும் செயல் திட்டங்களையும் முன்மொழிய உள்ளனர்.
திட்டங்களை நிறவேற்ற வடக்கு கிழக்கு மாகாண அரசுகளுக்கு உதவுவதற்காக புலம்பெயர் நாடுகளில் உள்ள சர்வதேச அறிவுசார் வல்லுனர்களையும், தொழில் முனைவர்களையும் கொண்ட மீள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுக்களும் அமைக்கப்படும். கனடிய தமிழர் பேரவை (Candian Tamil Congress) ஒருங்கிணைக்கும் இந்த சர்வதேச மாநாட்டினை நடத்துவதற்கு கனடியத் தமிழர் மருத்துவ சங்கம் (CTMA), சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO), தமிழ் மருத்துவ அறிஞர் நிறுவனம்- பிரித்தானியா (MIOT-UK),தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - கனடா (TNA-Canada), கனடாவின் சில முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல தமிழ் அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றன. இந்த சர்வதேச மாநாட்டிற்கான ஆலோசனைகளை அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டிசி யில் செயல்படும் துரைசிங்கம் நிறுவனம் (Thuraisingham & Associates) வழங்கி உதவுகிறது. தமிழர் தாயகத்தின் மீளக்கட்டுமானத்திற்கான தேவைகள் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் இம்மாநாட்டினைச் சிறப்பாக நடத்தி, அதன்மூலம் வடக்கு கிழக்கு வாழ் நம் மக்களுக்கு உதவுவதற்கு ஆதரவு கோரி கனடிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலதிக தகவல்களை http://www.developnortheast.org/ என்ற மாநாட்டு இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.