சென்னை: வீட்டு வேலைக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த பெண், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் பேத்தியை கடத்திச் சென்றார். 50 தனிப் படைகள் அமைத்து போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், பேருந்து நிலையத்தில் குழந்தையோடு காத்திருந்த அவர் கைது செய்யப்பட்டார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஜானகிராம் காலனி 1வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சீனிவாஸ், 40 வயதான இவர் ஒரு தொழிலதிபர். இவருடைய மனைவி 35 வயதான கோபிகா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஹாசினி என்ற பெண் குழந்தை உள்ளது. சீனிவாசின் தந்தை முனுசாமி ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.
நேற்று முன்தினம் குழந்தை ஹாசினி வீட்டில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் குழந்தை மாயமாகிவிட்டது. காணாமல் போன குழந்தையை வீட்டில் இருந்த அனைவரும் தேடியும் கிடைக்கவில்லை. மேலும், வேலைக்கார பெண் பியூலாவையும் வீட்டில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசனும், முனுசாமியும் காணாமல் போன குழந்தையையும், பியூலாவையும் ஊர் முழுக்க தேடியுள்ளனர். அவர்கள் இருவரும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் குழந்தையை கண்டுபிடிக்க 50க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய 5 தனிப்படைகள் தேடும் வேட்டையில் ஈடுபட்டன. வேலைக்கார பெண் பியூலாவின் செல்போன் டவரை போலீசார் கண்காணித்தனர். மேலும், நெல்லூர், காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் மாறுவேடமிட்டு போலீசார் பியூலாவைக் கண்காணித்து வந்தனர்.
இந்தத் தேடுதல் வேட்டையின் போது, நேற்று மதியம் சென்னை, புரசைவாக்கத்தில் பியூலா போலீசாரிடம் சிக்கினார். பின்னர், அவரிடம் இருந்து குழந்தையையும் பத்திரமாக போலீசார் மீட்டனர். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 26 வயதான பியூலா அண்ணாநகரில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் 2 நாட்களுக்கு முன்னர்தான் வீட்டு வேலைக்காக சீனிவாசின் வீட்டுக்கு வந்துள்ளார். வேலைக்கு வந்த இரண்டே நாட்களில் பெண் குழந்தை கடத்தி அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றுள்ளார். கடத்தப்பட்ட குழந்தையுடன் வீட்டிற்கு சென்ற பியூலாவை அவர்களது பெற்றோர்கள் கண்டித்து குழந்தையை திரும்ப ஒப்படைக்கும்படி சொல்லி விரட்டியுள்ளனர். இதனால் சென்னைக்கு திரும்பினார் பியூலா. சென்னைக்கு வந்த பியூலாவின் செல்போன் டவரை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், நேற்று மதியம் 1.50 மணி அளவில் பியூலாவின் செல்போன் டவர், புரசைவாக்கத்தை காட்டியது. இதனால் உஷாரான போலீசார் புரசைவாக்கம் பகுதியில் முகாமிட்டனர். அப்போது, ஓட்டேரிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பியூலாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் பேத்தி ஹாசினியையும் கைப்பற்றி பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.