சென்னை: துணை ராணுவத்தை அனுப்பி கர்நாடகாவிலுள்ள அணைக்கட்டுகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காவிரியில் கர்நாடகா இந்த வருடம் உரிய அளவுக்கு தண்ணீர் தராததாலும், மழை பொய்த்துப்போனதாலும், டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தூக்கிட்டும், அதிர்ச்சியும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் காவிரி பங்கீடு குறித்த வழக்கு விசாரணை வந்தபோது, பிப்ரவரி 7ம் தேதி முதல் தினமும் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அதுவரை தினமும் தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
நிறைவேற்றாத கர்நாடகா:
ஆனால், கர்நாடகா இதற்கு முன்பும் சுப்ரீம் கோர்ட் இதுபோல பிறப்பித்த உத்தரவை இன்னமும் நிறைவேற்றவில்லை. இந்த உத்தரவையும் நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளதாக அதன் நீர்வள அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறிவிட்டார். இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசு தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது அதற்கான நெருக்கடியை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் துணை ராணுவம்:
தமிழக தலைமைச் செயலகத்தில் துணை ராணுவ உதவியோடு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தலைமைச் செயலர் ராம மோகனராவ் வீட்டிலும் இப்படி சோதனை நடந்தது. மாநில போலீசாராலோ அரசாலோ அதை எதிர்க்க முடியவில்லை. எனவே இதே பாணியை கர்நாடகாவிலும் மத்திய அரசு காட்டுமா என கேள்வி எழுப்புகிறார்கள் விவசாயிகள்.
பிசிசிஐக்கு நேர்ந்த கதி:
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத பிசிசிஐ அமைப்பை ஏறத்தாழ கலைத்தே விட்டது உச்சநீதிமன்றம். தலைவர், செயலாளர் பதவிகளில் இருந்தவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். கர்நாடகாவும் தொடர்ந்து ஒரு காரணத்தை கூறி தண்ணீர் திறக்க மறுப்பதால் துணை ராணுவத்தை அனுப்பி கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பை மத்திய அரசே மேற்கொள்ளலாமே என்பது விவசாயிகள் ஆதங்கம்.
விவசாயிகள் கேட்கிறார்கள்:
உச்சநீதிமன்றம் உத்தரவிடாமல் மத்திய அரசு தானாக முன்வந்து இப்படி நடவடிக்கை எடுப்பது நடைமுறையில் சாத்தியக்குறைவான செயல். ஆனால், தலைமைச் செயலகத்தில் சோதனையிடும்போது காட்டிய ஆர்வத்தை விவசாயிகள் சாவதை தடுப்பதிலும் மத்திய அரசு காண்பிக்க வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கை. ஏனெனில், மாநில சுய ஆட்சி கொள்கையை கொண்ட திராவிட கட்சிகளால் ஆளப்பட்டு, ஆளப்படும் தமிழகத்திலேயே துணை ராணுவத்தை நிறுத்த முடிந்த மத்திய அரசுக்கு, தேசிய கட்சி ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் ஏன் நிறுத்த முடியாது என கேட்கிறார்கள் விவசாயிகள்.