சென்னை: அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஜனவரி 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு ஏடிஎம்களில் இருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம் என்றும் அறிவித்திருந்தது. அதே நேரத்தில் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனையடுத்து, பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்திராத வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்தும் பணம் எடுத்தனர். மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான முறையும் பணம் எடுக்கப்பட்டு வந்தது.
பணம் எடுக்க கட்டணம்:
டிசம்பர் மாதத்தோடு, ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காக இருந்த தளர்வுகள் முடிவிற்கு வந்துவிட்டன. ரிசர்வ் வங்கி மீண்டும் அதனை புதுப்பிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதனைச் செய்யாமல் ரிசர்வ் வங்கி அமைதி காத்து வருகிறது. இதனால் ஏடிஎம்களில் குறிப்பிட்ட முறைக்கு பிறகு பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எத்தனை முறை பணம் எடுக்கலாம்?:
கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்கள் மூலம் மாதம் 5 முறையும், பிற வங்கியில் 3 முறையும் மட்டுமே பணம் எடுக்க முடியும். கணக்கு வைத்துள்ள வங்கியில் 5 முறையில் அதிகபட்சமாக 22,500 ரூபாய் எடுக்க முடியும். பெரும்பாலும் ரூ.2,000 நோட்டு மட்டுமே இருப்பதால் இந்த உச்சவரம்பு அளவுக்கு எடுப்பதும் சாத்தியமில்லை என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
மூடி கிடக்கும் ஏடிஎம்கள்:
இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம்களில் 80 சதவீதம் திறக்கப்படாமலேயே உள்ளன. 20 சதவீதம் மட்டும்தான் வேலை செய்கிறது என்றபட்சத்தில் அதிலும் பெரும்பாலானவற்றில் பணம் இல்லை. இந்த நிலையில், கணக்கில் எவ்வளவு இருப்பு தொகை இருக்கிறது என்று பார்ப்பதற்கு கூட கட்டணம் வசூலிக்கப்படும் சூழல் உள்ளது.
புதிய அறிவிப்பு:
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர், பணம் போடவும், பணம் எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டிற்கு பிறகாவது நிலைமை சீரடையும் என்று பொதுமக்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், ஏடிஎம் மையங்களில் எடுக்கப்படும் பணத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டெபிட் கார்டுக்கும் கட்டணம்:
அதே போன்று டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இதனால் எந்த விதமான பணப்பரிவர்த்தனை செய்தாலும், பொதுமக்களுக்கு நஷ்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.