சென்னை: சசிகலா தலைமையிலான அதிமுகவுடனான கூட்டணி வைப்பதற்கான வேலைகளை இப்போதே மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடங்கிட்டார் என்றே தெரிகிறது. போயஸ் கார்டனில் விரைவில் சசிகலாவை நேரில் சந்தித்து வைகோ பேசக் கூடும் என கூறப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் மறைந்த பின்னரும் சசிகலா நடராஜன் தரப்புக்கு மத்திய அரசு தரும் நெருக்கடிகளை சமாளிக்க ஆளுநர் வித்யாசகர் ராவை மன்னார்குடி கோஷ்டியின் 'தூதராக' சென்று பார்த்து சமாதானம் பேசியவர் வைகோ. ஆனால் என்னுடைய பழைய நண்பர் வித்யாசகர் ராவ், ஜல்லிக்கட்டு பற்றி பேச போனேன் என காரணங்களை அடுக்கி வந்தார் வைகோ. ஜெயலலிதா மரணம் குறித்து நாடே சந்தேகம் எழுப்பிக் கொண்டிருக்கிறது... .சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனோ இன்னும் ஆவேசமாக, ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடுவேன் என கூறியிருந்தார்.
சசிக்கு வைகோ ஆதரவு:
ஆனால் வைகோ மட்டும் ஜெயலலிதா மரணத்திலும் கூட சசிகலா நடராஜன் தரப்புக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். அத்துடன் மக்கள் நலக் கூட்டணி உடைய நான் காரணமாக இருக்கமாட்டேன் என கூறிய வைகோ, அந்த அணியைவிட்டு மதிமுக வெளியேறும் எனவும் அறிவித்தார்.
காசி ஆனந்தன் நூல் வெளியீடு:
இந்த நிலையில் கவிஞர் காசி ஆனந்தனின் தம்பி ஜெயத்துக்கு நூலின் 2-ம் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காசி ஆனந்தன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது தம்பி ஜெயமும் விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்தவர்.
நடராஜன் பங்கேற்பு:
தம்பி ஜெயத்துக்கு என்ற காசி ஆனந்தனின் நூல் உணர்வுப்பூர்வமானது. அதன் 2-ம் பாகம் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பழ. நெடுமாறன், வைகோ ஆகியோருடன் சசிகலா கணவர் நடராஜனும் கலந்து கொண்டார்.
எனக்கு நடராஜன் நெருக்கம்:
இந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ, நடராஜனும் தாமும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதுவும் குற்றாலத்தில் தமது திருமணம் நடைபெற்ற போது 3 நாட்கள் தமக்கு துணையாக இருந்து உதவி செய்தது நடராஜன்தான்... நான் நடராஜனுக்கு நன்றியுள்ளவன். நன்றியை ஒரு போதும் மறக்கமாட்டேன் என்று குறிப்பிட்டார் வைகோ.
ஐடோண்ட் கேர்:
அதே நேரத்தில், நடராஜனை நான் இப்படி பாராட்டி பேசியதை ஊடகங்கள் திரித்தும் எழுதும்.. ஐ டோண்ட் கேர் என்று வழக்கம்போல தம்முடைய பாணியில் வைகோ குறிப்பிட்டுவிட்டு அமர்ந்தார். வைகோவின் 'நன்றி கடன்' பேச்சானது அதிமுகவுடன் மதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்பதை மறைமுகமாக குறிப்பிடுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
விரைவில் சசியுடன் சந்திப்பு?:
ஜெயலலிதாவை 'அன்பு சகோதரி' என குறிப்பிட்டவர் வைகோ. தற்போது நடராஜனின் மனைவி சசிகலா, ஜெயலலிதா இடத்தில் அமர்ந்திருக்கிறார். விரைவில் போயஸ் கார்டனுக்கு சென்று சசிகலாவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்தக் கூடும் என்றே அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.