சென்னை: ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றியுள்ள சசிகலா போட்டியிட அக்கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா எம்எல்ஏ பதவியை இழந்தார். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து 2015-ம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தம்முடைய ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை வெற்றிவேல் ராஜினாமா செய்தார். அத்தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
விரைவில் இடைத்தேர்தல்:
2016 சட்டசபை தேர்தலிலும் ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா மீண்டும் போட்டியிட்டு வென்றார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்கே நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தோற்கடிக்காமல் விடமாட்டோம்:
ஜெயலலிதாவின் பங்களா, கார், சேர், கட்சி என அனைத்தையும் கைப்பற்றிய சசிகலா ஆர்கே நகர் தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று அவரது ஜால்ராக்கள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் அதிமுக தொண்டர்களோ, சசிகலா மட்டும் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்காமல் விடமாட்டோம் என்ற கொந்தளிப்புடன் இருக்கின்றனர்.
தீபாவுக்கே ஆதரவு:
ஆர்கே நகர் தொகுதி அதிமுக தொண்டர்கள் நாள்தோறும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை நேரில் சந்தித்து அரசியலுக்கு வர வேண்டும்; அதிமுக தலைமையை ஏற்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அத்துடன் ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவின் வாரிசாக தீபாதான் போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
தென்மாவட்டத்தை நோக்கி:
தற்போதைய நிலையில் ஆர்கே நகர் தொகுதி பக்கம் சசிகலா எட்டி கூட பார்க்க முடியாத நிலை உள்ளது. அந்த அளவுக்கு சசிகலா மீது உச்சகட்ட அதிருப்தியில் உள்ளனர் அதிமுக தொண்டர்கள். இதனால் தென்மாவட்ட தொகுதி ஒன்றை தேர்ந்தெடுப்பதில் சசிகலா தரப்பு மும்முரமாக உள்ளது.