சென்னை: பிரதமர் மோடி தனது புத்தாண்டு உரையின் போது நாட்டு மக்களுக்கு பல திட்டங்களை அறிவித்தார். வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்க அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து கடனுக்கான வட்டி விகிதங்களை எஸ்.பி.ஐ. வங்கி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ளது. எஸ்பிஐ வங்கி தனது வட்டி விகிதத்தை 8.9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத்தது. அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கி, வட்டி விகிதத்தை 8.20 சதவீதமாக குறைத்தது.
ஐசிஐசிஐ வங்கி:
நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, வீட்டுக் கடன் வட்டியை 0.45 சதவிகிதம் குறைத்து அறிவித்துள்ளது. இதன்மூலம், 9.1 சதவிகிதமாக இருந்த வீட்டுக் கடன் வட்டி 8.65 சதவிகிதமாக குறைவதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
குறைத்த வங்கிகள்:
இதையடுத்து வர்த்தகப் போட்டி காரணமாக ஐடிபிஐ, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், பஞ்சாப் நேஷனல், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன. 0.15 சதவிகிதம் முதல் 0.7 சதவிகிதம் வரை வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி:
இதைதொடர்ந்து, தற்போது ஹெச்டிஎப்சி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளும் கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. எச்டிஎப்சி வங்கி கடன் விகிதத்தை 0.90 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. அதன்படி, தற்போது எச்டிஎப்சி வங்கியில் ஒரு வருட கடனுக்கான வட்டி 8.50 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதக் குறைப்பு ஜனவரி 7ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஹெச்டிஎப்சிவங்கி அறிவித்துள்ளது.
கனராவங்கி:
கனரா வங்கியும் குறு செலவு கடன் விகிதத்தை 9.15 சதவிகிதத்திலிருந்து 8.45 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. வட்டி விகிதத்தை குறைப்பதை தொடர்ந்து டெபாசிட்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது.
வீட்டு கடன்களுக்கு வட்டி:
வங்கிகள் அல்லாத வீட்டு கடன் வழங்கும் டிஹெச்எப்எல் நிறுவனமானது வீட்டு கடன்களுக்கான வட்டியை 9.10 சதவிகிதத்திலிருந்து 8.60 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. இது ஜனவரி 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
வீடு, கார் கடன்கள்:
அதேபோல, கடந்த செவ்வாய் கிழமையன்று இந்தியா புல்ஸ் வீட்டு நிதி நிறுவனமும் வீட்டு கடனுக்கான வட்டியை பெண்களுக்கு 8.65 சதவிகிதமாகவும், மற்றவர்களுக்கு 8.7 சதவிகிதமாகவும் குறைத்தது. வங்கிகளின் இந்த அறிவிப்பையடுத்து வீட்டுக்கடன், கார் கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதம் கணிசமான அளவு குறையும்.