சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயங்களை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்கள் திலகமாக மக்கள் நினைவில் நின்ற எம்ஜிஆருக்கு வரும் 17ம் தேதி பிறந்த நாள் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. எம்ஜிஆர் நூற்றாண்டை கொண்டாடுவது என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும், அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் அஞ்சல் தலையை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், சிறப்பு எம்ஜிஆர் நாணயம் வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஓபிஎஸ். எம்ஜிஆரின் 100வது பிறந்த தினம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், சிறப்பு நாணயம், அஞ்சல் தலை வெளியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.