வாஷிங்டன்: இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் வர்த்தகங்களை தீர்மானிக்கும் எச்1பி விசா நடைமுறைகளில் மாற்றங்கள் செய்ய வகை செய்து சீர்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் வெளிநாட்டினருக்கு அந்த நாடு 'எச்-1 பி' விசாக்களை வழங்கி வருகிறது.
இந்த 'எச்-1 பி' விசாக்களுக்கு, இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விசா கேட்டு விண்ணப்பங்கள் குவிவதால், குலுக்கல் நடத்தி விசா வழங்கும் நடைமுறைகூட உண்டு. ஆனால், 'எச்-1 பி' விசாக்களால் அமெரிக்காவில், உள்நாட்டினரின் வேலை வாய்ப்பு பாதிப்பதாக சிலரால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
குற்றச்சாட்டு:
குறிப்பாக, டிஸ்னி, சோகால் எடிசன் உள்ளிட்ட நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைக்காகவும் குறைந்த சம்பளத்திற்காகவும் அமெரிக்க ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிவிட்டு வெளிநாட்டு ஊழியர்களை எச்1பி விசா நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி நியமித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கட்டுப்பாடு:
இதையடுத்து ‘எச்-1 பி' விசாக்களில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து, பிற நாட்டினர் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு இடைஞ்சல் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது. கடந்த ஆண்டு இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலான போதிலும், கடும் எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை.
மசோதா தாக்கல்:
இதையடுத்து, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட எச்1பி விசா சீர்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மோசோதா மூலம், எச்1பி விசா நடைமுறைகளைக் கொண்டு தவறாகப் பயன்படுத்தி அமெரிக்க ஊழியர்களை குறைந்த சம்பளம் மூலம் வெளியேற்றும் நடைமுறைக்கு முட்டுக்கட்டை போடப்படும் அதே நேரத்தில், திறமை வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக்கப்படாதவாறும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஊதியம், படிப்பு:
கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த குடியரசு கட்சி எம்.பி.க்கள் டேரல் இஸாவும், ஸ்காட் பீட்டர்சும் இம்மசோதாவை தாக்கல் செய்தனர். இதன் படி எச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஆண்டு சம்பளம் 100,000 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் அந்த ஊழியர் சுமார் ரூ.68 லட்சத்துக்கு அதிகமாக ஆண்டு, சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும். மேலும் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கான விதிவிலக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் (மாஸ்டர் டிகிரி விலக்கு நீக்கம்) என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
ட்ரம்ப் ஆசை:
அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப், வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறி வருகிறார். தலைமை மாற்றம் நிகழும் இந்த வேளையில் அமெரிக்க காங்கிரசில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நிறைவேறினால், இந்தியாவை சேர்ந்த குறைந்த சம்பள பிரிவு ஊழியர்களால் அமெரிக்கா சென்று எச்1பி விசாவின்கீழ் பணியாற்ற முடியாத சூழல் உருவாகும்.