சென்னை: மேடவாக்கத்தைச் சேர்ந்த இன்ஜினியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலமாகியுள்ளது. திட்டமிட்டு கணவனை கொன்றுவிட்டு மர்ம நபர்கள் கொன்றதாக நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அறிவழகனின் மனைவி சுரேகா மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த அறிவழகன் ராயப்பேட்டையில் உள்ள தனியார் தியேட்டர் மாலில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுரேகா என்ற மனைவியும் சாதனா என்ற 4 வயது மகளும் உள்ளனர்.
கடந்த 3ம் தேதி இரவு இவர்கள் வீட்டுக்கு அருகே அறிவழகன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். சுரேகா வெட்டு காயத்தோடு கிடந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மயக்கநிலையில் இருந்த சுரேகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அறிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் விசாரணையை முடுக்கி விட்ட போலீசார் மருத்துவமனையில் இருந்த சுரேகாவிடம் விசாரித்தனர். அப்போது புத்தாண்டு அன்று மது அருந்திய சிலரை அறிவழகன் தட்டிக் கேட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மீண்டும் வீட்டிற்கு வந்து அறிவழகனை கொன்றதாகவும் கூறினார்.
சுரேகா பக்கம் திரும்பயி சந்தேகம்:
இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த ஏரியாவில் கும்பலாக யாரும் அன்று சுற்றி திரியவில்லை என்பதும், சுரேகா கூறியது பொய் என்றும் தெரியவந்தது. இதையடுத்து சுரேகாவிடம் போலீசார் அதிரடியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கணபதியுடன் கள்ளக்காதல் மலர்ந்தது
கணபதியுடன் கள்ளக்காதல் மலர்ந்தது
அதில் சுரேகா, அதேப் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவருக்கும் தனக்கும் கள்ளக்காதல் இருந்ததாக தெரிவித்தார். இதனால் கணவன் அறிவழகனுடன் வாழப்பிடிக்கவில்லை என்றார்.
தீர்த்துக்கட்ட திட்டம்:
அறிவழகன் தங்களின் காதலுக்கு இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து அறிவழகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாக சுரேகா கூறினார். சாப்பாட்டில் விஷம் வைத்தோ அல்லது தூக்க மாத்திரைகளை கொடுத்தோ கொலை செய்யலாமா என இருவரும் யோசித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிடைத்த சந்தர்ப்பம்:
இந்த நேரத்தில் தான் புத்தாண்டின் போது அப்பகுதியில் மது அருந்திய சிலரை அறிவழகன் தட்டிக் கேட்டுள்ளார்.இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு சுரேகாவும் கள்ளக்காதலன் கணபதியும், அறிவழகனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
தலையனையால் அமுக்கி கொலை:
அதன்படி கடந்த 3ஆம் தேதி இரவு கணபதியை வீட்டிற்கு வரவழைத்த சுரேகா, அவருடன் சேர்ந்து தலையனையால் அறிவழகனை அமுக்கியுள்ளனர். அப்போது அவர் திமிறியதால் கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.
போலீசை திசை திருப்ப முயற்சி:
மேலும் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக வீட்டிற்கு வெளியே அறிவழகனின் உடலை தூக்கிசென்று போட்டதாகவும் அருகில் மதுப்புட்டிகள், பிளாஸ்டிக் டம்ளர்களை வீசிவிட்டு மது குடித்த வாலிபர்களே கொலையை செய்ததாக கூறி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சுரேகாவையும் அவரது கள்ளக்காதலன் கணபதியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தவிக்கும் குழந்தை:
இன்ஜினியர் அறிவழகன், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டபோது அவரது 4 வயது மகள் சாதனா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். தற்போது தந்தையையும் இழந்து தாயையும் இழந்து அந்த சிறுமி தவித்து வருகிறார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொன்றுவிட்டு நாடகமாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.