சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தம்முடைய புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் ஜெ. தீபா. அதேநேரத்தில் புதிய கட்சியை தொடங்க விடாமல் தீபாவை தடுப்பதற்கான முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளதாம் மன்னார்குடி கோஷ்டி. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் அக்கட்சியை கைப்பற்றிவிட்டார் சசிகலா. ஆனால் அதிமுக தொண்டர்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை. சசிகலாவை ஏற்க மறுக்கும் அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை புதிய தலைவராக முன்னிறுத்துகிறார்கள். நாள்தோறும் தீபாவின் தி.நகர் வீட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
தீபாவுக்கு ஆதரவு:
அதிமுகவின் தலைமையை தீபாதான் ஏற்க வேண்டும் என்றும் சசிகலாவை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். ஆர்கே நகர் இடைத் தேர்தலில் தீபாதான் போட்டியிட வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
யாரும் தடுக்க முடியாது:
அந்த தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவராக, பொறுமையாக இருங்கள்; நான் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என ஆறுதலாக பேசிவருகிறார் தீபா. தொண்டர்களின் தன்னெழுச்சி ஒரு பேரியக்கமாக மாறும் வகையில் பொறுத்திருப்போம் என்பதுதான் தீபாவின் ப்ளானாம்.
பேரியக்கமாக...:
இந்த தன்னெழுச்சி ஒரு மாபெரும் பேரியக்கமாக நிச்சயம் உருவெடுக்கும்; அதுவரை தனிக்கட்சிக்கான வியூகங்கள், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறாராம் தீபா.
புதிய கட்சி:
பிப்ரவரி 24-ந் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் தீபா, அதே நாளில் புதிய கட்சியை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளாராம். அன்றைய நாளில் சசிகலாவுக்கு எதிரான அதிமுக தலைவர்கள் தீபாவுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
முட்டுக்கட்டை...:
தற்போது தீபாவின் புதிய கட்சி தொடங்கும் முயற்சியை தடுப்பதில் மன்னார்குடி கோஷ்டி படுதீவிரமாக இருந்து வருகிறது. தீபாவுடனான சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த போராடிக் கொண்டிருக்கிறது மன்னார்குடி கோஷ்டி.