சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வசிக்கும் போயஸ்கார்டனிலுள்ள வேதா இல்லத்தில் மக்கள் கூட்டம் இல்லாத நிலையில், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வசிக்கும் பகுதியில் அதிமுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக கடந்த சனிக்கிழமை, சசிகலா பதவியேற்றார். ஆளும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் என்றாலும் கூட அவரது போயஸ் இல்லத்திற்கு (ஜெயலலிதா வசித்த வீடு), அதிமுக தொண்டர்களும், பெண்களும் செல்வதை குறைத்துவிட்டனர். ஜெயலலிதா மறைந்த சில நாட்களுக்கு பிறகு வரை அவர் வாழ்ந்த வீடு என்பதால் அதை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதியது. ஆனால், மக்கள் கூட்டம் சசிகலாவை பார்க்க வந்துள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், இப்போது கூட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது போயஸ் இல்லம்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், தி.நகர் சிவஞானம் சாலையிலுள்ள தீபா வீட்டுக்கு எதிரே தினமும் ஆயிரக்கணக்கான அதிமுக ஆண்-பெண் தொண்டர்கள் வருகிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. ஜெயலலிதாவின் ரத்தம் அதிமுகவை கைப்பற்ற வேண்டும், அரசாள வேண்டும் என கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். ஆளும் கட்சி தலைமை பொறுப்பில் இருப்பவர்களையே பார்க்க செல்லாத மக்கள் கூட்டம், எந்த ஒரு நிர்வாகத்திலும் இல்லாத தனி மனுஷியான தீபாவை பார்க்க குவிவது ஆச்சரியப்பட வைக்கிறது. ஜெயலலிதாவின் உடலமைப்பு, குரல் வளம் போன்றவை தீபாவுக்கு இருப்பதால் அவரை ஜெயலலிதாவின் மறுவடிவாக அதிமுக தொண்டர்கள் பார்ப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தானாக சேர்ந்த கூட்டம்:
காசு, பணம், பிரியாணி என எதுவும் தராமல் தானாகவே தீபாவுக்கு சேரும் கூட்டத்தை பார்த்து அதிமுக மேல்மட்ட தலைவர்களுக்கு கிலி உண்டாகியுள்ளதாம். இதனால் தீபா குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை கட்டவிழ்த்துவிட குறிப்பிட்ட பிரிவினரை களமிறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவுத்துறை கண்காணிப்பு:
மேலும் தீபா வீட்டுக்கு முன்பு உளவுத்துறையினரை களமிறக்கியுள்ள மாநில அரசு, அங்கு நடைபெறும் நடவடிக்கைகளை கண்காணித்து அரசுக்கும், அதிமுக தலைமைக்கும் அறிக்கையளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றபடி உளவு சேகரித்து வருவதை பத்திரிகையாளர்களால் கவனிக்க முடிந்தது.