சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனு மீதான தீர்ப்பு இன்னும் ஓரிருவாரங்கள் தள்ளிப்போகலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் போயஸ் கார்டன். அதிமுகவை கபளீகரம் செய்துவிட்ட சசிகலா, முதலமைச்சர் பதவியை கைப்பற்ற துடிக்கிறார். அதே நேரத்தில் தலைக்கு மேலே கத்தியாய் சொத்து குவிப்பு வழக்கின் அப்பீல் மனு மீதான தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலைமை இருக்கிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 4-ந் தேதி அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவித்தார் சசிகலா. அதே நாளில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதிகள் தயாராக இருப்பதாகவும் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் எனவும் டெல்லியில் இருந்து தகவல் சசிகலாவுக்கு கிடைத்தது. இதனால் பீதியில் உறைந்து போயிருந்தார் சசிகலா. இதை நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். தற்போது இந்த தீர்ப்பு தேதியை தள்ளிப்போட வைக்கும் லாபியில் சசிகலா தரப்பு படுமும்முரமாக இருக்கிறதாம். பொங்கலுக்கு முன்னதாக நிச்சயம் தீர்ப்பு வந்துவிடாது; 20-ந் தேதிக்கு பின்னர்தான் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு 'முதல்வர்' பதவியை நோக்கி காத்திருக்கிறதாம் போயஸ் கார்டன்.