வாஷிங்டன்: எச்1பி விசா நடைமுறைகளில் மாற்றங்கள் செய்ய வகை செய்து சீர்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்திய தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா அல்லது ஏற்றம் ஏற்படுமா என்ற பட்டிமன்றங்கள் ஐடி அலுவலகங்களில் தொடங்கிவிட்டன. விவகாரத்திற்குள் செல்லும் முன்பாக, எச்-1 பி விசா என்றால் என்ன என்று பார்த்துவிடலாம். அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் வெளிநாட்டினருக்கு அந்த நாடு வழங்கும் விசாவின் பெயரே 'எச்-1 பி'. இந்த 'எச்-1 பி' விசாக்களால் அதிகம் பலன் பெறுவது என்னவோ, இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையினர்தான். ஒவ்வொரு ஆண்டும், இந்த விசா கேட்டு விண்ணப்பங்கள் குவிவதால், குலுக்கல் நடத்தி விசா வழங்கும் நிலை இருப்பதே இதற்கு சான்று.
அடிக்கடி பயணம்:
"அமெரிக்கா சென்று ஒரு ஆறு மாதங்கள் வேலை பார்த்துவிட்டு வாங்கள்.." என இந்திய ஐடி நிறுவனங்கள் அவ்வப்போது தங்கள் ஊழியர்களை அனுப்பி வைக்க அடிப்படை காரணமே இந்த வகை விசாதான். இப்படி உள்ளூர் வேலைகளை பார்க்க இந்தியாவிலிருந்து அவ்வப்போது ஊழியர்கள் வருவதால், உள்நாட்டினரின் வேலை வாய்ப்பு பாதிப்பதாக அமெரிக்காவில் முனுமுனுப்பு எழுகிறது.
கடிவாளம்:
டிஸ்னி, சோகால் எடிசன் உள்ளிட்ட நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைக்காகவும் குறைந்த சம்பளத்திற்காகவும் அமெரிக்க ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிவிட்டு வெளிநாட்டு ஊழியர்களையே முழுக்க முழுக்க, எச்1பி விசா நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி நியமித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்போது கடிவாளம் போடும்வகையில் இரு முக்கிய திருத்தங்களோடு சட்ட மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
மாஸ்டர் டிகிரி:
இதன் படி எச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஆண்டு சம்பளம் 100,000 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் அந்த ஊழியர் சுமார் ரூ.68 லட்சத்துக்கு அதிகமாக ஆண்டு, சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும்.மேலும் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கான விதிவிலக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் (மாஸ்டர் டிகிரி விலக்கு நீக்கம்) என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
அதிக சம்பளம்:
இவ்விரு விதிமுறைகள் மூலம், எச்1பி விசா மூலம், அமெரிக்கா செல்லும் இந்திய ஐடி ஊழியர் மாஸ்டர் டிகிரி படித்திருப்பது கட்டாயமாகிவிட்டது. அதேபோல முன்பெல்லாம் குறைந்த சம்பளக்காரர்களையும் அமெரிக்கா அனுப்பி வைத்ததை போல இனி முடியாது. ஆண்டுக்கு சுமார் ரூ.68 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறும் ஐடி ஊழியர்கள் என்றால் அவர்கள் சீனியர்களாகத்தான் இருப்பார்கள். எனவே ஜூனியர் நிலையில் இருப்பவர்களை அடிக்கடி அமெரிக்காவுக்கு விரட்டி விட ஐடி நிறுவனங்களால் இனி முடியாது.
ஊதிய உயர்வு:
குடும்பத்தை பிரிந்து அமெரிக்காவில் சென்றிருந்து வேலை பார்த்து கஷ்டப்பட வேண்டாம் என நினைத்தாலும், நிறுவனத்தின் நெருக்கடியால் அமெரிக்கா சென்றுகொண்டிருந்த ஊழியர்களுக்கு இது விடிவுகாலம்தான். மேலும், கண்டிப்பாக அமெரிக்கா அனுப்பிதான் வேலை பார்த்தாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள ஐடி நிறுவனங்கள் திறமையாளர்களுக்கு ஊதியத்தை அதிகரித்து தர வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஊதியம் அதிகமாக இருந்தால்தான் விசா கிடைக்கும் என்பதால் திறமையாளர்களுக்கு ஊதியத்தை அதிகரித்து கொடுத்தே அமெரிக்கா அனுப்ப வேண்டிய நிலை ஐடி நிறுவனங்களுக்கு ஏற்படும்.
பணி நீக்கம்:
இதுபோன்ற நிகழ்வுகள் நல்லவையே என்றாலும், ஊதியத்தை உயர்த்த வேண்டியுள்ளதால், அதை ஈடுகட்ட, புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கு பிங்க் ஸ்லிப் கொடுக்கவும் ஐடி நிறுவனங்கள் முயலும் என்ற தகவலும் ஐடி ஊழியர்களிடம் பரவி வருகிறது. ஆனால் ஐடி நிறுவன வட்டாரங்களோ, அமெரிக்கா அனுப்பி பணியாற்ற வைக்கும் ப்ராஜக்டுகளை குறைத்துக்கொள்ளும் என கூறுகிறது.