சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா என தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் 30 ஆண்டுகாலம் வகித்து வந்த இளைஞரணி செயலர் பதவியை விட்டுக் கொடுத்தார். புதிய இளைஞரணி செயலராக முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் முக அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்படும் நிலையில் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்த்து கொள்ளப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. இருந்தபோதும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்க வேண்டும்; அதனடிப்படையில்தான் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியும் என்பது ஸ்டாலின் தரப்பு வாதமாக இருந்து வருகிறது. ஆனால் அழகிரி தரப்பில் இதுவரை அத்தகைய கடிதம் எதுவும் தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கருணாநிதியுடனான அழகிரியின் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.