குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது குறித்து முடிவு செய்ய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
-
தற்போதுள்ள விதிகளின்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தொடர்புடைய நபர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழப்பார்.
-
அதேவேளையில், ஒருவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிட முடியும்.
இந்த நடைமுறையை எதிர்த்தும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளை மறுவரையறை செய்யக் கோரியும், பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
-
நாட்டில் உள்ள மொத்த எம்எல்ஏ, எம்.பி.க்களில் 33 சதவீதம் பேர்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவர்கள் அனை-வரும் நீதிமன்ற விசாரணையை
எதிர்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, குற்ற வழக்குகளில் தொடர்புடைய
வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக
தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
-
வழக்கு விசாரணையை எதிர்கொள்பவர்கள் அதிக அளவில்
தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
ஒருவர் மீதான வழக்கின் விசாரணை எந்தக் கட்டத்தில்
இருக்கும்போது, அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியிழந்தவராகக்
கருதப்படுவார் என்பதை வரையறுக்க வேண்டும் என்று அதில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
அந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்,
நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்
விகாஸ் சிங் வாதிடுகையில், "5 மாநில பேரவைத் தேர்தல் அடுத்த
மாதத்தில் தொடங்குவதால், இதனை அவசர வழக்காகக் கருதி
விரைந்து முடிவெடுக்க வேண்டும்;
இல்லையெனில், குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய பலர்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறக் கூடும்.
இது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல' என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
-
இந்த விவகாரத்தில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்
என்பது சரிதான்; அதேவேளையில்,அவசரகதியில் தீர்ப்பு வழங்க
இயலாது. ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தாலே அவர் தேர்தலில்
போட்டியிட முடியாது என உத்தரவிட்டால், அரசியல் உள்நோ
க்கத்துடன் வேண்டுமென்றே சிலர் மீது வழக்குகள் பதிய
வாழ்ப்புள்ளது
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து முடிவெடுக்க
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த அமர்வு உருவாக்கப்படும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்
-
வேட்பாளர்களின் வருமான ஆதாரத்தை வெளியிடக் கோரிக்கை
-
வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ள சொத்துகளை
எவ்வாறு வாங்கினார்கள்? அதற்கான வருமான ஆதாரம் என்ன?
என்பன தொடர்பான விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்
என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
-
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி
தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
செய்த மனுவுக்கு அளித்த பதிலில் தேர்தல் ஆணையம் இவ்வாறு
தெரிவித்துள்ளது.
அந்த பதில் மனுவில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
வேட்பாளர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சிலரின் சொத்து
விவரங்களை மட்டும் வேட்பு மனுவில் குறிப்பிட்டால் போதும் என்ற
நிலை தற்போது உள்ளது. சம்பந்தப்பட்ட வேட்பாளரும்,
அவரது உறவினர்களும் எவ்வாறு அந்தச் சொத்துகளை வாங்கினர்?
எந்த வழியில் அதற்காக வருமானம் ஈட்டினர்? என்பதை அறிந்து
கொள்ளும் உரிமை வாக்களிக்கும் குடிமக்களுக்கு உண்டு. எனவே,
வேட்பு மனுவில் வருமான ஆதார விவரங்களையும் கட்டாயம்
தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினமணி