சென்னை: தமிழகத்தில் பருவமழை பொய்த்ததே வறட்சிக்கு காரணம் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும், பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் பருவமழை பொய்த்ததே வறட்சிக்கு காரணம். மழையில்லாத காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை செய்தோம். தட்டுப்பாட்டை போக்க பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் தொடர்பான புகாரை இணைய தளத்தில் தெரிவிக்கலாம். ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. குடிநீர் கேன்கள் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.