டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தால் நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகள் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
நாட்டில் புழக்கத்தில் இருந்த 80 சதவீத ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியதாக கூறப்படுகிறது. பல்வேறு தொழில்கள் முடங்கியதால் ஏராளமானோர் வேலை இழந்தனர். இந்நிலையில், பருவமழை பொய்த்தது மற்றும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம் ஆகியவை காரணமாக நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் சுரங்கம் மற்றும் கட்டுமான துறைகள் மந்தமான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம், வனத்துறை, மீன்பிடி தொழிலின் வளர்ச்சி கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பு ஆண்டு 4.1 சதவீதமாக விரிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.