சென்னை: கேப்டன் பொறுப்பில் இருந்து டோணி விலகியது அவரது தனிப்பட்ட விருப்பம். அந்த முடிவை தாம் மதிப்பதாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். அதேவேளையில் விராட் கோஹ்லியும் சளைத்தவர் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருநாள் மற்றும், டி20 கேப்டன் பதவிகளை துறப்பதாக டோணி நேற்று முன்தினம் அறிவித்தார். டோணியின் விலகலால் அவரது ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், 2016-ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற அஸ்வினுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய அஸ்வின், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகத் தேர்வானதை தான் பெருமையாய் கருதுகிறேன். தனிப்பட்ட முறையில் எந்த இலக்கையும் தாம் வைத்துக் கொள்வதில்லை என்றும், அணியின் வெற்றியே குறிக்கோள் எனக் கூறினார். மேலும், டோணி கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்த அஸ்வின், இது டோணியின் தனிப்பட்ட விருப்பம். அவர் வெற்றிக் கேப்டன் என்றும் கூறினார். அதேசமயம் விராட் கோஹ்லியும் சளைத்தவர் அல்ல என்றார்.