தேனி: பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்குழந்தைகளுக்கு ஆபத்து என தகவல் பரவியது. இதனால் பீதியடைந்த பெண்கள் கோவில்களில் மடிப்பிச்சை எடுத்து பரிகாரம் செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரே ஒரு ஆண் குழந்தை உள்ள குடும்பங்களுக்கு 2017ஆம் ஆண்டு ஆபத்து என தகவல் பரவியது. மேலும் அந்த ஆண்குழந்தைகளுக்கும் ஆகாது எனவும் வதந்தி பரவியது.
இதற்கு பரிகாரமாக ஒரு ஆண்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் 7 வீடுகளில் மடிப் பிச்சை எடுத்து விநாயகர் கோவிலில் விளக்கேற்றி வழிபட வேண்டும் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதனால் பீதியடைந்த பெண்கள் 7 வீடுகளில் மடிப்பிச்சை எடுத்தனர். பின்னர் அங்குள்ள கோவிகளில் தீபம் ஏற்றி அவர்கள் பரிகாரம் செய்தனர். இந்த வதந்தி வேகமாக பரவியதால் ஏராளமான பெண்கள் மடிப்பிச்சை எடுத்து பரிகாரம் செய்தனர். இதனால் தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரபரப்பு நிலவியது.