மதுரை: ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி இன்று மதுரையில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி நேற்று சென்னையில் மாபெரும் பேரணி நடந்தது. மெரினா கடற்கரையில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று மதுரையில் பேரணி நடைபெறுகிறது. இது குறித்து ஏறு தழுவுதல் பாதுகாப்பு போராட்டக்குழு ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ள அழைப்பில் கூறியிருப்பதாவது,
இன்று 9. 1. 2017 காலை 10 மணி அளவில் கோரிப்பாளையம் தேவர் சிலையில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை சென்று ஏறு தழுவுதலுக்கு அனுமதி வேண்டி மனு கொடுக்கும் போராட்டத்திற்கு மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள், பல்வேறு அமைப்புகள், ஆட்டோ ஓட்டுனர்கள், தமிழர் பண்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், ஏறு தழுவுதல் ஆர்வலர்கள், காளை வளர்ப்போர்கள், விவசாயிகள், தமிழனின் அடையாளத்தையும், பண்பாட்டையும் அழித்து விட்டால் இத்தமிழ் சமூகத்தை அழித்து விடலாம் என கங்கணம் கட்டிக் கொண்டு தமிழர் பண்பாட்டு விளையாட்டிற்கு தடை வாங்கியவர்களுக்கு எதிராக தமிழினத்தின் ஒற்றுமை குரலை ஓங்கி ஒலித்திட மதுரையில் ௯டிடுவோம்.
நம்மால் முடியாதது எவரால் முடியும்? தமிழ் இனமே திரண்டு வா.... 9 1 2017 அன்று ஒரு நாள் தமிழ் இன பண்பாட்டை காத்திட நேரத்தை ஒதுக்கீடு செய்திடுவீர்... கரம் கோர்ப்போம்... களம் அமைப்போம்... நமது அடையாளங்கள் அழிந்திட நாம் வேடிக்கை பார்க்க வேண்டாம்.
தொடர்புக்கு:
ஶ்ரீவை. எம் .எஸ். ராஜா
9366666008
8072045640
ஒருங்கிணைப்பாளர், ஏறு தழுவுதல் பாதுகாப்பு போராட்டக்குழு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறிவித்தபடி இன்று மதுரையில் பேரணி நடந்தது. பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோரிப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிடப்பட்டது.