சென்னை: சசிகலா அதிமுக பொதுச்செயலரான நிலையில் நடத்தி வரும் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு என்ற நாடகம் இன்றுடன் முடிவடைகிறது. என்னதான் சசிகலாவை ஆதரிப்பதாக சொல்லிக் கொண்டாலும் அதிமுக எம்.எல்.ஏ.க்களோ யாராவது கலகக் குரல் எழுப்பி தனி அணி அமைத்துவிடமாட்டார்களா? என்றே காத்திருப்பதாகவே அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலாவுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் முழு ஆதரவு இருக்கிறது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வேறுவழியில்லாமல் இவர்கள் சசிகலாவை ஆதரிக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.
தீபாவுக்கு ஆதரவு:
சசிகலாவுக்கு எதிராக அதிமுகவுக்கு உள்ளே இருந்து வலுவான குரல் எதுவும் வெளிப்படவில்லை. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை தலைவராக வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் தன்னெழுச்சியான கிளர்ந்து எழுந்து வருகின்றனர்.
தலைவர்கள் ஆதரவு?:
தீபாவும் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தீபாவை ஆதரிப்பதாக அதிமுக தலைவர்கள் யாரும் இதுவரை அறிவிக்கவும் இல்லை.
விஸ்வரூபமெடுக்கும்:
அப்படி அதிமுக நிர்வாகிகளும் தீபாவை ஆதரிப்பதாகவோ அல்லது சசிகலாவை எதிர்ப்பதாக கலகக் குரல் எழுப்பிவிட்டால் அது கட்டுப்படுத்த முடியாத விஸ்வரூபமாகிவிடும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
பூனைக்கு மணிகட்டுவது யார்?:
தற்போதைய அதிமுக எம்எல்ஏக்கள் பலரும், நிச்சயம் எங்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லைதான்... சரி யார் தலைமையில் அணி திரள்வது? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் ஒன்றிரண்டு பேர் கலகக் குரல் எழுப்பிவிட்டாலே போதும்.. அது கட்டுக்கடங்காத பெருங்கோபமாக சசிகலாவுக்கு எதிராக வெடிக்கும்... அப்போது இருக்கு சசிகலாவுக்கு எதிரான கச்சேரி என பொங்குகின்றனர். விஸ்வரூபத்துக்கு காத்திருப்பு!