டெல்லி: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. ஒருவேளை தள்ளிப்போனாலும் கூட மே 5ம் தேதிக்கு முன்பாக தீர்ப்பு வந்தே தீரும் வாய்ப்பு உள்ளது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில், 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. நான்கு பேரும் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா ஹைகோர்ட் தனி நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பில் கணிதப் பிழை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருந்ததால், கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
ஆறு மாதங்களாகிவிட்டது:
இவ்வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர், தேதி குறிப்பிடாமல் 6 மாதங்களுக்கு முன்பே தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளனர். இந்நிலையில், உடல் நலக்குறைவால் ஜெயலலிதா மரணமடைந்தார். டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
புதிய தலைமை நீதிபதி:
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த, டி.எஸ். தாக்கூர் ஓய்வு பெற்று, ஜே.எஸ்.கெஹர் பதவி யேற்றுள்ளார். இதையொட்டிய அலுவல்கள் முடிந்துள்ளதால், சுப்ரீம் கோர்ட்டின் கவனம், சொத்துக் குவிப்பு வழக்கு மீது திரும்பலாம் என தெரிகிறது. எனவே இந்த வாரத்தில் கூட சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
மே 5க்கு முன் தீர்ப்பு ஏன்?:
அல்லது மே 5ம் தேதிக்கு முன்பாக எப்படியும் தீர்ப்பு வந்தே தீரும். அதற்குமேல் போக வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறுகிறார்கள் சட்ட வல்லுநர்கள். ஏனெனில், வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளில் ஒருவரான, பினாகி சந்திரகோஷ், மே 27ல் ஓய்வுபெற வுள்ளார். இருப்பினும், மே 6 முதல் சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை ஆரம்பிப்பதால் மே 5ம் தேதிதான் அவர் உண்மையிலேயே பணியாற்றும் கடைசி தினமாக இருக்கும்.
நீதிபதி பணி ஓய்வு:
எனவே நீதிபதி பினாகி சந்திரகோஷ் பணி ஓய்வு பெறுவதற்கு முன், தீர்ப்பு வெளியாகியே தீர வேண்டும். இருப்பினும் மே 5ம் தேதிவரை தீர்ப்பு கூறுவதை நீதிபதிகள் இழுத்துச் செல்லமாட்டார்கள் என்றே தெரிவதால் அதற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகலாம். தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பு எப்போது வெளியே வரும் என்றே சட்ட வல்லுநர்களும், அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
அதிமுக எதிர்காலம்:
தீர்ப்பு சசிகலா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வந்தால், அதிமுகவின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பன்னீர்செல்வம் தலைமையின்கீழ் அதிமுக செல்லும் வாய்ப்பைவிட, சசிகலா கணவர் நடராஜன் மற்றும் மன்னார்குடி தரப்பிடம் கட்சியும், ஆட்சியும் முழுமையாக செல்ல வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.