சென்னை: சந்திரமுகி அறைக்குள் கங்கா போனா... நின்னா... நடந்தா.. கடைசியில் சந்திரமுகியாக மாறிட்டா... இது வாட்ஸ் அப்பில் உலா வரும் பிரபல வசனம். இந்த வசனத்திற்கும் இந்த கட்டுரைக்கும் தொடர்பு இருக்கிறதோ இல்லையே ஆனால் லேசான டச் உள்ளது என்பது இதை படித்த பின்னர் தெரியும். ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்னர், அவருக்கு உதவியாக போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலாவிற்கும், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் போயஸ்தோட்டத்தில் வசிக்கும் சசிகலாவிற்கும் நிறையவே மாற்றம் உள்ளது. கழுத்துவரை மூடப்பட்ட சட்டை, ஏற்றி வாரப்பட்ட தலை, வலை போட்டு மறைக்கப்பட்ட கொண்டை என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஸ்டைல் முற்றிலும் மாறிவிட்டது.
வேதா நிலையத்தில் உள்ள பணியாளர்களுடனும் அதிமுக நிர்வாகிகளுடன் முன்பு சகஜமாக பேசி வந்த சசிகலா, தற்போது அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின்னர் கொஞ்சம் இடைவெளி விட்டே பழகுகிறார்.
இளவரசி அட்வைஸ்:
ஜெயலலிதாவிற்கு எப்படி சசிகலா உதவியாளராக இருந்தாரோ அதே போல இப்போது சசிகலாவிற்கு அட்வைசராக மாறியிருக்கிறாராம் இளவரசி. இளவரசிதான் இப்போது நம்பர் 2 என்ற பேச்சும் அடிபடுகிறது. அவர் சொல்வதை அப்படியே கேட்கிறாராம் சசிகலா.
புது காஸ்ட்யூம் டிசைனர்:
சசிகலாவிற்கு புது ஆடைகளை வடிவமைத்தவர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவாம். ஜெயலலிதா போல வலை வைத்த கொண்டை போட்டு அவரது அழகை மெருகேற்றியதும் கூட கிருஷ்ணபிரியாதானாம்.
போயஸ் தோட்டத்து டெய்லர்கள்:
சசிகலாவிற்காகவே போயஸ்தோட்டத்தில் இரண்டு டெய்லர்கள் புதிதாக அப்பாயிண்ட் செய்திருக்கிறார்களாம். புது மாதிரியான உடை, மேக் அப், ஹேர்ஸ்டைல் மாற்றி வீட்டிற்குள் ஒத்திகை பார்த்த சசிகலா, தற்போது ஜெயலலிதா போலவே தனது நடை, உடை பாவனைகளையும் மாற்றி வருகிறார்.
பால்கனி தரிசனம்:
தொண்டர்களிடம் எப்படி நடந்து கொள்வது, நிர்வாகிகள் மத்தியில் எப்படி பேசுவது என்று போயஸ் தோட்டத்திலேயே ஒருமுறைக்கு இருமுறை ஒத்திகை பார்த்து விட்டே கிளம்புகிறாராம் சசிகலா. பால்கனியில் நின்று கையசைப்பது, இரட்டை விரல் காட்டுவது என்பது கூட பக்கா ஒத்திகை என்கின்றனர். இவை எல்லாம் அதிருப்தியில் உள்ள தொண்டர்களை கவரத்தானாம். ஆனால் தொண்டர்கள் சசிகலாவை ஏற்றுக்கொள்வார்களா? காலம்தான் பதில் சொல்லும்.