சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதுதவிர நாகப்பட்டினத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஜனவரி 9ம் தேதி விசாரணைக்கு வருவதால் அந்த வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கிறேன் என்று சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது. முன்னதாக ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி எம்.பி. சசிகலா புஷ்பா மற்றும் யுவ சக்தி இயக்கம் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கில் மேலும் அழுத்தம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.