சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கான முன் பதிவை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் சென்னையில் தொழில் மற்றும் பணி நிமித்தமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதேபோல கோவை, ஒசூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களிலும் பல பகுதி மக்களும் வசிக்கிறார்கள்.
எனவே, முக்கிய நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் இயக்கப்படும் பஸ்களுக்கு சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 26 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 5 மையங்கள் செயல்பட உள்ளன. முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்காகவும் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. http:/www.tnstc.in என்ற இணையதளத்திலும் முன் பதிவு செய்யலாம்.