சென்னை: ஓட்டுப்போடும் போது ஆட் காட்டி விரலில் மை வைத்தாலே நம்மில் பலர் அலறுவார்கள். ஆனால் போட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்கு எல்லாம் தொண்டர்கள் கை விரல்களில் மை வைத்துள்ளனர் தேமுதிக நிர்வாகிகள். தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு சத்தமில்லாமல் இருந்து வருகிறார். அவ்வப்போது அறிக்கைகள் மட்டுமே அவரது பெயரில் வெளியாகி வருகிறது. அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். தொண்டர்களுடன் நான் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் உள்ள தொண்டர்கள் நிர்வாகிகளை சந்தித்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த் சந்திப்பு:
தொண்டர்களுடன் நான் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் உள்ள கோபி, அந்தியூர், பவானிசாகர், மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு உள்ளிட்ட 8 தொகுதியில் உள்ள தொண்டர்களை கவுந்தப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சந்தித்தார்.
தொண்டர்கள் பலரும் விஜயகாந்தை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினர்.
ரூ. 100 வசூல்:
விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க விரும்பியவர்களுக்கு தொகுதி வாரியாக கவுன்டர் அமைக்கப்பட்டு அவர்களிடம் நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு மாவட்ட நிர்வாகிகள் டோக்கன் வழங்கினர். போட்டோ எடுக்கும் அறைக்குள் நுழையும் முன், இடது கை ஆள்காட்டி விரலில் மார்க்கர் பென் வைத்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
அடையாள மை:
டோக்கனுடன் இரண்டு இரண்டு பேராக விஜயகாந்தை சந்தித்தனர். ஒரு முறை போட்டோ எடுத்தவர்கள் மீண்டும் புகைப்படம் எடுக்க வராமல் இருப்பதற்காக அவர்களுடைய விரலில் அடையாள மை வைக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பிரேமலதா:
விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா கவுந்தப்பாடி வந்த போதும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தனி அறையில் பல மணி நேரம் காத்திருந்து பின் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜயகாந்துடன் புறப்பட்டு சென்றார். பிரேமலதா தனது கட்சித் தொண்டர்களை என் சந்திக்கவில்லை என்ற தகவல் தெரியவில்லை.
பெரியார் ஸ்டைலில்:
பெரியார், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர்தான் கட்சி வளர்ச்சி நிதிக்காக தொண்டர்களிடம் வசூலிப்பார்கள். இப்போது விஜயகாந்தும் தொண்டர்களிடம் வசூலைத் தொடங்கியுள்ளார்.